For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூரில் வாழ நீங்க லட்சங்களில் சம்பாதிக்கணும்- செலவு அங்கதான் அதிகமாம்!

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: உலகிலேயே செலவுக்கு பெயர் போன நகரம் சிங்கப்பூர்தான் என்று ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளது.

பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதுபோல், இந்த ஆண்டு 93 நாடுகளில், 140 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

வரவு எட்டணா, செலவு பத்தணா:

வரவு எட்டணா, செலவு பத்தணா:

இதில், உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் என தெரிய வந்துள்ளது. பாரீஸ், ஓஸ்லோ, ஜூரிச், சிட்னி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

அதே இடம்; அதே நாடு:

அதே இடம்; அதே நாடு:

கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்விலும், இதே நகரங்கள் இதே இடங்களைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது, மிகவும் அபூர்வமானதாக கருதப்படுகிறது.

பலசரக்குக்கே 11 சதவீதம் செலவாம்:

பலசரக்குக்கே 11 சதவீதம் செலவாம்:

சிங்கப்பூரில் உள்ள பலசரக்கு சாமான்கள் விலை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளதை விட 11 சதவீதம் அதிகமாகும். துணிமணிகள், 50 சதவீதம் அதிகமாகும்.

காருக்கே கட்டணம் அதிகம்:

காருக்கே கட்டணம் அதிகம்:

மேலும், சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கு சான்றிதழ் பெறும் முறை உள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து செலவு, நியூயார்க்கை விட மூன்று மடங்கு அதிகமாக போய்விட்டது. இந்த காரணங்களால், சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளது.

English summary
Singapore is the world's most expensive city, according to an index compiled by the Economist Intelligence Unit. It comes in ahead of Paris, Oslo, Zurich and London. Timothy McDonald reports from Singapore on whether the ranking is justified.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X