For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய சீனா எல்லை பிரச்சனை.. அமெரிக்காவின் கருத்து முட்டாள்தனமான செயல்.. சீனா கொதிப்பு

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினையில் அமெரிக்கா கருத்து தெரிவிப்பது முட்டாள்தனமான செயல் என்று சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எல்லைப்பகுதியில் சீன வீரர்கள் எப்போதும் அமைதியான நிலைமையையே கடைப்பிடிப்பதாகவும், இதில் அமெரிக்காவுக்கு எந்த வேலையும் இல்லை என்றும் எச்சரித்துள்ளது.

Recommended Video

    Nepal’s New Political Map Claims India’s Territories

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும், லடாக் எனஇரண்டு யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, அவ்வப்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி வருகிறது.'

    அருணாச்சல பிரதேசம், சிக்கிம் போன்ற பகுதிகளுக்குள் பல முறை நுழைய முயன்றுள்ளது. இதை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

    இந்தியாவில் ஒரே நாளில் 6,029 பேருக்கு கொரோனா- அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து 3-வது இடம்இந்தியாவில் ஒரே நாளில் 6,029 பேருக்கு கொரோனா- அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து 3-வது இடம்

    பதற்றம் தணிந்தது

    பதற்றம் தணிந்தது

    இந்நிலையில் அண்மையில் இந்திய எல்லைபப்பகுதியான லடாக் பகுதிக்குள் சீன வீரர்கள் நுழைந்தனர். இதை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இருநாடுளுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை நீண்டகாலமாக உள்ள நிலையில், இந்திய வீரர்கள் தான் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி வருவதாக சீனா குற்றம்சாட்டியது. இததை இந்தியா திட்டவட்டமாக நிராகரிதத்து. இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க வழக்கம் போல் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் தற்போது பதற்றம் இல்லாமல் சுமூகமாக இருக்கிறது.

    சீனா அச்சுறுத்தல்

    சீனா அச்சுறுத்தல்

    இந்நிலையில், இந்திய எல்லை பகுதியில் சீனா தொந்தரவு செய்து வருவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க மூத்த அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் இதுபற்றி கூறும் போது, தென் சீனக் கடல் பகுதி மட்டுமல்ல வேறு விவகாரத்திலும் சீனாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் அச்சுறுத்தலையே உருவாக்குகின்றன. இந்திய எல்லையில் தொடர்ந்து தொந்தரவு அளிக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டு வருகிறது. தனது பலத்தை காட்டும் விதத்தில் சீனா தொடர்ந்து இதுபோல் செயல்பட்டு வருகிறது என்றார்.

    அமெரிக்கா கருத்து

    அமெரிக்கா கருத்து

    இதுவரை அமெரிக்கா எல்லை பிரச்னைகளில் கருத்து தெரிவித்தது கிடையாது. கொரோனா வைரஸ் தொற்று பரவிய பின்னர் சீனா மீது கோபத்தில் உள்ள அமெரிக்கா, கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இல்லாம் கடுயைமாக திட்டி வருகிறது. அந்த வகையில் முதல்முறையாக சீனா இந்திய எல்லை பிரச்னையில் சீனாவே அச்சுறுத்துவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

    சீனா கண்டனம்

    சீனா கண்டனம்

    அமெரிக்காவின் இந்த கருத்தால் கொதித்துப்போன சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஸாவோ லிஜான, "இந்தியா-சீனா இடையிலா இரு நாட்டு எல்லைப்பிரச்சினையில் அமெரிக்கா கருத்துக்கள் தெரிவிப்பது முட்டாள்தனமான செயல். நாங்களே சுமுகமாகப் பேசித்தீர்ப்போம். இதில் அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியமிலை. தூதரக ரீதியில் என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அதை இருநாடுகளும் செய்து வருகின்றன. இதில் எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்படி இந்தியாவை வலியுறுத்தி உள்ளோம். எல்லைப்பகுதியில் சீன வீரர்கள் எப்போதும் அமைதியான நிலைமையையே கடைப்பிடிக்கின்றனர், எனவே இதில் அமெரிக்காவுக்கு எந்த வேலையும் இல்லை" என்று இவ்வாறு கூறினார்.

    English summary
    China said that The US diplomat’s remarks are just nonsense . China’s position on the China-India boundary issue is consistent and clear.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X