For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ

Google Oneindia Tamil News

Recommended Video

    Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer win 2019 Nobel Economics Prize

    ஸ்டாக்ஹோம்: நோபல் பரிசை இணைந்து பெறுகிற 6-வது தம்பதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளனர் பொருளாதார அறிஞர்களான அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்லோ.

    2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பான்னர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெம் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உலகளாவிய வறுமை ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

    sixth couple Banerjee-Esther Duflo won Nobel Prize

    நோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி என்கிற பெருமைக்குரியவர்களாகி இருக்கின்றனர் அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்லோ. மேரி கியூரி, பியரி கியூரி இணைந்து 1903-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது தம்பதியினர்.

    சல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்சல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

    அவர்களைத் தொடர்ந்து 1935-ல் பிரெட்ரிக் ஜோலியட் மற்றும் ஐரினே ஜோலியட் தம்பதியினர் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றனர். 1947-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசை கார்ல் கோரி, கெர்ட்டி கோரி தம்பதியினரும் 1974-ல் ஆல்வா மிர்டால், குன்னார் மிர்டால் தம்பதியினர் பொருளாதார அறிவியலுக்காகவும் நோபல் பரிசு பெற்றனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு எட்வர்ட் மோசேர் மற்றும் மே பிரிட் தம்பதியினர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வென்றனர். தற்போது 6-வது தம்பதியினராக அபிஜித், எஸ்தர் இணைந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

    English summary
    Abhijit Banerjee and Esther Duflo became the sixth couple to get the Nobel Prize together
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X