For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைப் புலிகளுக்கு நிதி கொடுத்ததாக பொய் சொல்வதா?: ராஜபக்சே மீது பாயும் எரிக் சோல்ஹெய்ம்

By Mathi
Google Oneindia Tamil News

ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாம் பெருமளவு நிதி கொடுத்ததாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பொய் பேசி வருவதாக நார்வேயைச் சேர்ந்த முன்னாள் சமாதான தூதர் எரிக் சோல்ஹெய்ம் சாடியுள்ளார்.

இலங்கையின் குருநாகல் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜபக்சே, நார்வேயின் எரிக் சோல்ஹெய்ம் இலங்கைக்கு எதிராக சாட்சி சொல்ல தற்போது முண்டியடித்துக்கொண்டு தயாராகிறார். ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அவர் சாட்சி சொல்லப்போகிறார்.

அன்று அவர் புலிகளுக்கு பணம் வழங்கியவர் என்பதை அனைவரும் உணர வேணடும். இதனை நோர்வே முறையாக விசாரணை செய்ய வேண்டும். எரிக் சோல்ஹெய்ம் புலிகளுக்கு நிதி வழங்கியதற்கான சாட்சி எங்களிடம் இருக்கிறது.

" உங்கள் இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கவே முடியாது.. அவர்கள் யுத்தத்தில் மிகத் திறமையானவர்கள்" என்று என்னிடம் கூறியவர்தான் எரிக் சோல்ஹெய்ம். இதற்கு பதிலாக, "பிரபாகரன் வடக்குக் காட்டில் பிறந்தவர் என்றால் நான் தெற்குக் காட்டில் பிறந்தவன்: ஒரு கை பார்ப்போம்" என்றேன்" என பேசியிருந்தார்.

ராஜபக்சேவின் இந்த பேச்சை தமது ட்விட்டரில் குறிப்பிட்டு, தேர்தலுக்காக ராஜபக்சே பொய் சொல்கிறார்... உண்மையை நாளை (இன்று) தெரிவிக்கிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார் எரிக் சோல்ஹெய்ம்.

English summary
Former Norwegian Special Peace Envoy Erick Solheim rejected Sri lanka President Mahinda Rajapaksa's claims that he was covertly financing the Tamil Tigers. Solheim in a Twitter message said, "President Rajapaksa tells lies about me as election approaches. I will set the truth straight tomorrow (Monday)".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X