கொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்
இஸ்தான்புல்: கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி-யின் அக்கா ரஷ்மியா அவார்ட் துருக்கி படைகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு அமைப்புகள், ரஷ்மியாவை, தங்கச் சுரங்கம் என குறிப்பிடுகின்றன.
சிரியாவில் சமீபத்தில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலின்போது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக விளங்கிய, அபுபக்கர் அல் பாக்தாதி, கொல்லப்பட்டார். இருப்பினும், ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து இயங்கியபடிதான் உள்ளனர்.
அந்த அமைப்பால், தொடர்ந்து மனித குலத்திற்கு ஆபத்து நீடிப்பதை மறுக்க முடியாது என்கிறது மேற்கத்திய உளவு அமைப்புகள். இந்த நிலையில், முக்கியமான ஒரு திருப்பம் நடந்துள்ளது.
மொத்தமே 3 நிமிஷம்தான்..முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு!

வாகன சோதனை
துருக்கி படைகளால், அலேப்போ மாகாணம், அசாஸ் நகர பகுதியில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையின்போது, அபுபக்கர் அல் பாக்தாதியின் அக்கா, ரஷ்மியா அவார்ட் சிக்கியுள்ளார். 65 வயதாகும் இவரை, தங்கச் சுரங்கம் என வர்ணிக்கிறது புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தங்கச் சுரங்கம்
புலனாய்வு அமைப்புகள், ரஷ்மியாவை, தங்களுக்கான தங்கச் சுரங்கம் என குறிப்பிடுகின்றன. காரணம், அவரிடம் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான ஏராளமான ரகசிய தகவல்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த மேலதிக புரிதல்களுக்கு இவர் உதவுவார் என உளவுத்துறை நம்புவதால், இவரை தங்கச் சுரங்கம் என்ற புனைப்பெயரில் அழைக்கின்றன.

குடும்பம்
ரஷ்மியா அவார்ட், தனது கணவர், மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களில் பெரியவர்களிடம் மட்டும் விசாரணை நடைபெறும் என்று, பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். சமர்ராவைச் சேர்ந்த ஈராக்கியரான அல்-பாக்தாதி, கடந்த மாதம், இப்பிராந்தியத்தின் அருகிலுள்ள மாகாணமான 'இட்லிப்' பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல், ஐஎஸ் அமைப்புக்கு, பெரும் அடியாக இருந்தது.

தாக்குதல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல ஐ.எஸ் உறுப்பினர்கள் வடமேற்கு சிரியாவிற்கு கடத்தல் வழிகள் வழியாக தப்பித்துள்ளனர், மற்றவர்கள் சிரியா அல்லது ஈராக்கில் பாலைவனத்தில் பதுங்கியுள்ளனர். அல்-பாக்தாதி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவரது சகோதரர்களில் ஒருவரான அபு ஹம்ஸாவுடன் இருப்பதாக தெரியவந்தது. அப்போதுதான் அமெரிக்க படைகள் தாக்குதலை அரங்கேற்றின.