For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத்தாரில் நடந்த கொடூர மராத்தான்.. சுடு மணலில் காலில் செருப்பு கூட போடாமல் ஓட விடப்பட்ட தொழிலாளர்கள்!

Google Oneindia Tamil News

தோஹா: கத்தாரில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை மிகக் கொடூரமான முறையில் பங்கேற்க வைத்த அவலம் நடந்துள்ளது. இது மனித உரிமை அமைப்புகளின் கடும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது.

2022ம் ஆண்டு கத்தாரில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏர்படுத்தும் பணிகள் அங்கு முடக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக பல நாட்டுத் தொழிலாளரக்ள் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு சரியான சாப்பாடு, இருப்பிட வடதி இல்லாமல் கொத்தடிமைகள் போல வேலை வாங்கப்படுவதாக ஏற்கனவே புகார் உள்ளது. தினசரி ஒரு வெளிநாட்டுத் தொழிலாளர் உயிரிழப்பதாவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்காக ஒரு மராத்தான் போட்டி கத்தாரில் நடந்தது. அதில் பல நாட்டுத் தொழிலாளர்களையும் கட்டாயப்படுத்தி ககலந்து கொள்ள வைத்துள்ளனர் கத்தார் நிர்வாகத்தினர்.

செருப்பு கூட போடாமல்...

போட்டிருந்த உடைகளுடன், காலில் செருப்புக் கூட போடாமல் இந்த மராத்தானில் ஓட விட்டுள்ளனர். சுடுமணல், சாலையில் நடந்த இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பலர் கடும் அவதியுற்றுள்ளனர். தோஹாவில் இந்த ஓட்டப் போட்டி நடந்துள்ளது.

திரும்ப திரும்ப ஓட வைத்து...

மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதாக காட்டுவதற்காக முன்னாடி ஓடியவர்களை மீண்டும் பின்னே வந்து ஓட வைத்துள்ளனர். கோட்டைத் தாண்டி வந்தவர்களை திட்டி மீண்டும் பின்னால் போக வைத்து மறுபடியும் ஓடி வர வைத்துள்ளனர்.

போட்டிக்கான காரணம்...

இந்தப் போட்டி எதற்காக என்று கத்தாரைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் அமைப்பு ஒன்று கறுகையில், எங்களது நாட்டில் வெளிநாட்டுத் தொவிலாளர்களை கொடுமைப்படுத்துகிறோம் என்று குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் நாங்கள் தொழிலாளர்களை நல்லபடியாக நடத்துகிறோம் என்பதை நிரூபிக்கவே இந்த போட்டியை நடத்தினோம் என்றனர்.

கொத்தடிமைகள்...

கத்தார் நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளரக்ள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுகின்றனர். அங்கு வேலைக்குப் போகும் வெளிநாட்டுத் தொழிலாளர், தாம் வேலை பார்க்கும் முதலாலியை பகைத்துக் கொள்ள முடியாது. அப்படி நடந்தால் எக்ஸிட் பெர்மிட் கொடுக்கமல் வேலையை விட்டு நீக்கு விடுவார்கள். வேறு வேலையிலும் சேர முடியாது. சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே கஷ்டப்பட வேண்டியதுதான்.

கண்டனம்...

இந்த நிலையில் தோஹாவில் நடந்த இந்த மராத்தான் ஓட்டத்தில் தொழிலாளர்களை மிகக் கொடூரமான முறையில் பங்கேற்க வைத்த செயலுக்கு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கின்னஸ் சாதனை தோல்வி...

மேலும் இந்த ஓட்டத்தால் கின்னஸ் சாதனை படைக்கவும் முடியாமல் போய் விட்டது. காரணம். 50,000 பேருக்கு மேல் போட்டியில் பங்கேற்க வேண்டியிருந்தது. ஆனால் அத்தனை பேரை திரட்ட முடியாமல் போனதால் சாதனை படைக்க முடியாமல் போனதாம்.

கத்தார் நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In Qatar, where at least one immigrant worker dies per day working to complete its World Cup infrastructure by 2022, workers were bused in to run a marathon in whatever clothes they had in order to break a Guinness World Record.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X