For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஒரு சின்ன குழு.. உலகுக்கே ரூல்ஸ் போட முடியாது".. ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா.. மோதல்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஜி 7 போன்ற சில நாடுகள் மட்டும் கொண்ட சின்ன குழுவால் உலகையே கட்டுப்படுத்த முடியாது என்று சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே சீனா மீது உலக நாடுகள் கோபத்தில் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பரவல் காரணமாகவும், சீனாவின் எல்லையோர மோதல்கள் காரணமாகவும் சீனா மீது கோபத்தில் உள்ளது.

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

இன்னொரு பக்கம் கொரோனா பரவல் தோற்றம் குறித்து விசாரிக்கும்படி அமெரிக்க அதிபர் பிடன் உத்தரவிட்டு இருப்பதும் கூட சீனாவிற்கான நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் சீனா கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச நட்புகள் இன்றி தனித்து விடப்படும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.

ஜி7 மாநாடு

ஜி7 மாநாடு

இப்படிப்பட்ட நிலையில்தான் பிரிட்டனில் நடக்கும் ஜி 7 மாநாடு கவனம் பெறுகிறது. ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். பிரிட்டனின் கான்வாலில் தற்போது இந்த நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் மீட்டிங் நடக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு இதில் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீனா

சீனா

இதில் சீனா ஓரம்கட்டப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை விமர்சனம் வைத்துள்ளது. அதில் ஒரு சின்ன குழு உலகை கட்டுப்படுத்துவதும். உலகின் தலைவிதியை ஒரு சில நாடுகள் மட்டும் அடங்கிய ஒரு குழு நிர்ணயம் செய்வது முடிந்துவிட்டது. அந்த காலம் மலையேறிவிட்டது.

காலம்

காலம்

உலக நாடுகளுக்கு சில பணக்கார நாடுகள் மட்டும் ரூல்ஸ் போட்ட காலம் எல்லாம் முடிந்துவிட்டது. உலக நாடுகள் சிறியதோ, பெரியதோ, வலுவானது, எளிமையானது எல்லோரும் சமம் என்பதே எங்களின் கருத்து. எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். சர்வதேச முடிவுகளை அப்படித்தான் எடுக்க வேண்டும்.

 முடியாது

முடியாது

உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து மட்டுமே சர்வதேச முடிவுகளை எடுக்க வேண்டும், என்று ஜி7 மாநாட்டை விமர்சிக்கும் விதமாக சீனா பேசியுள்ளது. இந்த ஜி 7 மாநாட்டில் சீனாவின் வளர்ச்சி குறித்தும், சீனா மற்ற நாடுகளை கட்டுப்படுத்த நினைப்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர். முக்கியமாக சீனாவின் Belt and Road initiative சர்வதேச இணைப்பு திட்டத்திற்கு எதிராக திட்டங்களை கொண்டு வர உள்ளனர்.

சீனா

சீனா

சீனாவின் திடீர் வளர்ச்சியும், கொரோனா பரவலும் மற்ற வளர்ந்த நாடுகளை பாதித்து இருக்கிறது. முக்கியமாக சர்வதேச அரசியலை சீனாவின் திடீர் வளர்ச்சி புரட்டி போட கூடியதாக மாற்றியுள்ளது. இதனால் சீனாவிற்கு எதிராக ஜி 7 நாடுகள் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தும், முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Small groups cannot put rule over the world, those days are over, says China on G7 Summit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X