For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக ஆபாச வீடியோ பிசினஸ் மதிப்பு $97 பில்லியன்! இன்னும் வளர்ச்சி உள்ளது- ஆய்வில் அதிர்ச்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

லண்டன்: ஸ்மார்ட்போன்களின் அசுர வளர்ச்சியால், அடுத்த ஐந்தாண்டுகளில் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள், படங்கள் பார்ப்போர் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரிக்கப்போகிறது என்று எச்சரிக்கிறது பிரிட்டனை சேர்ந்த டிஜிட்டல் மார்க்கெட் ஆய்வு நிறுவனமான, ஜுனிபர் ரிசர்ச் நிறுவனம்.

42 சதவீதம் உயரும்

42 சதவீதம் உயரும்

ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ள உண்மைகள் இவைதான்: அடுத்த ஐந்தாண்டுகளில் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்போர் எண்ணிக்கை 42 சதவீதம் உயரப்போகிறது. இதற்கு முக்கிய காரணம், இணையதள வளர்ச்சி, ஸ்மார்ட்போன் விற்பனையின் அதிகரிப்பு போன்றவைதான்.

193 பில்லியன்

193 பில்லியன்

தற்போது ஆண்டுக்கு 136 பில்லியன் அளவுக்கு ஆபாச படங்கள் பார்க்கப்படுகின்றன. இதுவே, 2020ம் ஆண்டுக்குள், 193 பில்லியன் படங்களாக உயரும். இணையதளம், செல்போன்களே கதி என்று இருப்போர் எளிதாக இதுபோன்ற ஆபாச படங்களை பார்க்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.

இணையசேவை

இணையசேவை

3ஜி 4ஜி நெட்வொர்க்குகள் சிறு நகரங்களிலும் வேகமான இணைய சேவையை வழங்குவதாலும், வை-பை சேவைகள் எளிதாக கிடைக்க தொடங்கியுள்ளதாலும், ஆபாச வீடியோக்களை எளிதாக பார்க்கும் வாய்ப்பு இணையதள பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கிறது. வீடியோக்கள் விரைவில் ஸ்ட்ரீமிங் ஆவதால், படம் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.

சராசரியாக 348 வீடியோ

சராசரியாக 348 வீடியோ

ஸ்மார்ட்போன் வைத்துள்ளோர் தற்போது வருடத்திற்கு சராசரியாக 348 ஆபாச வீடியோக்களை பார்க்கின்றனர். தற்போது, உலக ஆபாச பட வர்த்தக மதிப்பு 97 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த தொழிலும் வருங்காலத்தில் அதிகம் வளரும். இது அப்பாவி பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

அமெரிக்காவில் அதிகம்

அமெரிக்காவில் அதிகம்

வளர்ந்து வரும் நாடுகளைவிட வளர்ந்த நாடுகளில் ஆபாச வெப்சைட்டுகளை அதிகம் பேர் பார்க்கின்றனர். அமெரிக்கா இதில் முன்னணியிலுல்ளது. ஆபாச வெப்சைட்டுகளுக்கு சந்தா கட்டி வீடியோ பார்ப்போர் எண்ணிக்கையும் வருங்காலங்களில் மிகவும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறது அந்த ஆய்வு.

English summary
Thanks to the growth in the smartphone sector, online porn viewing is going to see an explosion in the next five years, a study said. According to Britain-based digital market research specialist firm Juniper Research, online porn watching will grow by nearly 42 percent in the next five years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X