For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாம்புத் தோல் போன்ற தோற்றத்துடன் ப்ளூட்டோ.. நாசாவின் புதுப் படம் ரிலீஸ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ப்ளூட்டோ கிரகத்தின் புதிய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்குப் பாம்புத் தோல் போல ப்ளூட்டோவின் பரப்பு இதில் காணப்படுகிறது.

நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படம் இதுவாகும். இதுவரை பார்த்திராத வகையில் இந்த படத்தில் ப்ளூட்டோவின் மேற்பரப்பு காணப்படுகிறது.

'Snake skin' photos reveal Pluto in dazzling details

மேற்பரப்பு மிகவும் வித்தியாசமாக, பாம்பின் தோல் போலவே காணப்படுவது விஞ்ஞானிகளிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

'Snake skin' photos reveal Pluto in dazzling details

இந்தப் புகைப்படத்தில் ப்ளூட்டோ கிரகத்தின் பல நூறு மைல்கள் பரப்பளவு காணப்படுகிறது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இது காணப்படுகிறது என்று நியூ ஹாரிஸான்ஸ் குழுவின் துணைத் தலைவரான வில்லியம் மெக்கின்னன் கூறியுள்ளார்.

'Snake skin' photos reveal Pluto in dazzling details

ஒரு பக்கம் இதைப் பார்த்தால் மரப் பட்டை போல காட்சி தருகிறது. பெரிய பாம்பின் தோல் போலவும் இது காணப்படுகிறது. ஆங்காங்கே ஐஸ் திட்டுக்கள் குவிந்திருப்பதால் இப்படிப்பட்ட தோற்றம் தெரிவதாக கருதுகிறம் என்றார் அவர்.

'Snake skin' photos reveal Pluto in dazzling details

ப்ளூட்டோவை அருகில் நெருங்கிக் கடந்தபோது நியூ ஹாரிஸன்ஸ் எடுத்த இன்னும் விரிவான, ஒரிஜினல் நிறத்துடன் கூடிய படங்கள் நமக்கு வரவில்லை. அவை வரும்போது மேலும் பல புதிய தகவல்களை நாம் அறிய முடியும் என்றார் வில்லியம்.

English summary
New "snakeskin" mystifying images of Pluto sent by NASA's New Horizons probe have revealed a multitude of previously unseen topographic and compositional details. The images captures a vast rippling landscape of strange, aligned linear ridges that has astonished New Horizons team members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X