For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடெனுக்கு 'மாற்று நோபல்' விருது வழங்கும் ஸ்வீடன்

By Siva
Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்ட அந்நாட்டு தேசிய பாதுகாப்பு மையத்தின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் ஸ்வீடன் நாட்டு மனித உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது நோபல் பரிசுக்கு மாற்று என்று கருதப்படுகிறது.

அமெரிக்க உளவுத் துறையின் ரகசியங்களை வெளியிட்ட அந்நாட்டு தேசிய பாதுகாப்பு மையத்தின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் ரஷ்யாவில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஸ்வீடனின் உயரிய விருதான நோபல் பரிசுக்கு மாற்று என்று கூறப்படும் ரைட் லைவ்லிஹுட் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Snowden

இந்த விருதை இங்கிலாந்தைச் சேர்ந்த தி கார்டியன் நாளிதழின் ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜர், ஆசிய மனித உரிமை ஆணையத்தின் பாசில் ஃபெர்ணான்டோ, அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் பில் மெக்கிபன், பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கிர் ஆகியோருடன் அவர் பகிர்ந்து கொள்கிறார்.

ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஆலன் பல செய்திகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 1 கோடியே 28 லட்சத்து 1 ஆயிரத்து 161 பரிசுத் தொகையை அந்த 5 பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறுகிறது. ஆனால் விழாவில் ஸ்னோடென் கலந்து கொள்வாரா என்று தெரியவில்லை.

முன்னதாக ஸ்னோடெனின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Whistle Blower Edward Snowden has been selected for Sweden's top honor namely Right Livelihood Award also known as the alternative nobel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X