For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைதிக்கான நோபல் பரிசு 2014... ஸ்னோடென் பெயரை பரிந்துரைத்த நார்வே எம்பிக்கள்

Google Oneindia Tamil News

Snowden gets Nobel prize nomination from Noregian MPs
ஓஸ்லோ: அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளனர் நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் இருவர்.

உலக நாடுகளின் ரகசியக்களை அமெரிக்கா உளவு பார்த்தது என்ற உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை ஊழியரான எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அமெரிக்கா ஸ்னோடென்னை தேசத்துரோகி முத்திரை குத்தி தேடி வருகிறது.

தற்போது ஸ்னோடென், ரஷ்ய அரசிடம் அரசியல் தஞ்சம் புகுந்து, அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில், எட்வர்ட் ஸ்னோடனின் பெயரை 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைத்துள்ளனர் நார்வே நாட்டு எம்.பிக்களான வெகர்ட் சோல்ஜெல், ஸ்னோர் வெலன் ஆகியோர்.

"ஸ்னோடனின் செயல்பாடுகள், அமைதியான உலகத்திற்கு உதவி புரிகிறது" என பரிந்துரைக்கான காரணம் தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.

English summary
Two Norwegian parliamentarians Thursday sent a letter to the Norwegian Nobel Committee, nominating the US whistleblower Edward Snowden for the 2014 Nobel peace prize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X