For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரயான் 2.. பாகிஸ்தான் அமைச்சர்தான் அப்படி.. ஆனா மக்கள் சொக்க தங்கமா இருக்காங்களே!

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான்-2 பின்னடைவு பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கிண்டல்

    இஸ்லாமாபாத்: சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டபோது பாகிஸ்தானின் தொழில்தொடர்பு துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி பொம்மை என கீழ்த்தரமாக வர்ணித்த நிலையில் அந்நாட்டு மக்களோ இஸ்ரோவை பாராட்டி வருகின்றனர்.

    சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகள் உள்ளன. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்பிட்டர் பிரிந்து சென்று நிலவுக்கு 100 கி.மீ. தூரத்தில் இருந்து சுற்றி வருகிறது.

    இது போல் லேண்டர் நேற்று முன் தினம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் சிறிய பின்னடைவு காரணமாக லேண்டருடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது.

    சிக்னல்கள் பெறுவதை லேண்டர் நிறுத்தியது ஏன்.. மயில்சாமி அண்ணாதுரை பரபரப்பு விளக்கம்சிக்னல்கள் பெறுவதை லேண்டர் நிறுத்தியது ஏன்.. மயில்சாமி அண்ணாதுரை பரபரப்பு விளக்கம்

    இந்திய விஞ்ஞானிகள்

    இந்திய விஞ்ஞானிகள்

    இதனால் இந்திய விஞ்ஞானிகள் முதல் சாதாரண மக்கள் வரை மன வேதனை அடைந்தனர். லேண்டர் மெதுவாக தரையிறங்கியிருந்தால் நிலவின் தென்பகுதிக்கு சென்ற நாடுகளில் 4-வது நாடாக இந்தியா விளங்கியிருக்கும்.

    சந்தேகம் இல்லை

    சந்தேகம் இல்லை

    இப்போதும் ஒன்றும் கெட்டு போகவில்லை. லேண்டரை தட்டி எழுப்பிவிட்டால் போதும். நாம் சாதனை செய்வோம் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும் 5 சதவீதம் பணிகள் முடிந்து விட்டால் நாம் சாதனையை செய்வோம் என்பதால் வயிற்றெரிச்சலில் உள்ள பாகிஸ்தான், நமது விஞ்ஞானத்தை கிண்டல் செய்துள்ளது.

    கிண்டல் செய்த அமைச்சர்

    அதிலும் இந்த செயலை கீழ்த்தரமாக கிண்டல் செய்தது ஒரு அமைச்சர். அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ளார். அவரது பெயர் ஃபவாத் சவுத்ரி ஆவார். அவர் அன்றைய தினம் தனது டுவிட்டரில் தயவு செய்து போய் தூங்குங்கள். பொம்மை சந்திரனில் இறங்குவதற்கு பதிலாக மும்பையில் இறங்கிவிட்டது என போட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

    பின்னடைவு

    பின்னடைவு

    இதற்கு தற்போது பாகிஸ்தானிலிருந்தே பதிலடி வரத்தொடங்கியுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு நெட்டிசன் ஒருவர் கூறுகையல், இந்தியா, நிலவு, பாகிஸ்தான். பாகிஸ்தான் பூமியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது. வெறும் 2.1 கி.மீ தூரத்தில் இந்தியா தனது திட்டத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது.

    அமைச்சர் ஃபவாத்

    அமைச்சர் ஃபவாத்

    சந்திரனுக்கு அனுப்புவதற்காக 10 பில்லியன் ரூபாயில் ரோவரை வாங்கியுள்ளது. ஆனால் நம்மால் பெஷாவர் பேருந்து திட்டத்துக்காக 73 பில்லியன் ரூபாயை இன்னும் புரட்ட முடியவில்லை. சந்திரனில் என்னவுள்ளது என பார்வையிட இஸ்ரோவால் பயன்படுத்தப்படும் ஹப்பிள் தொலைநோக்கியை நாம் பயன்படுத்தவதாக நமது அமைச்சர் ஃபவாத் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    வருமானம்

    வருமானம்

    டாடா கார்களை இந்தியா வைத்திருந்ததற்கு அவர்களை கிண்டல் செய்தோம். ஆனால் இன்று மிகவும் விலை உயர்ந்த கார்களான ஜாக்குவார், லேண்ட் ரோவர் ஆகிய கார்களை டாடா நிறுவனம் வைத்துள்ளது. இந்தியாவை கிண்டல் செய்வதற்கு முன், அந்நாட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு வருமானம் கிடைக்க வழி செய்வோம்.

    ஆதரவு

    ஆதரவு

    நமது எண்ணம் வேறு மாதிரியாக இருந்திருந்தால் இன்று காஷ்மீர் வித்தியாசமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். அது போல் இன்னொரு நெட்டிசன், இந்தியர்களே மன்னித்துவிடுங்கள். ஃபவாத் சவுத்ரி போன்ற ஒருவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக கிடைத்ததற்கு பாகிஸ்தானியர்களாகிய நாங்கள் வெட்கப்படுகிறோம். இஸ்ரோ நம்பத்தகாத விஷயங்களை செய்து வருகிறது. அதற்கு பாகிஸ்தானிடம் இருந்து நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார். இது போல் ஏராளமானோர் இந்தியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

    English summary
    Some Sane voices from Pakistan on Chandrayaan-2 as they praises India and criticises Pakistan Minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X