For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

69 நாட்கள் ஓய்வே இல்லாமல் தீயா வேலை செய்யும் சூரியன்.. எங்க தெரியுமா?

சொம்மாரோயி தீவில் 69 நாட்களுக்கு சூரியன் மறையாத காலகட்டம் நிலவுகிறது.

Google Oneindia Tamil News

ஒஸ்லோ: சொம்மாரோயி என்ற தீவில் தொடர்ந்து 69 நாட்களுக்கு சூரியன் மறையாமல் இருப்பதால், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ளது சொம்மாரோயி என்ற தீவு. ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ளதால், இந்தத் தீவின் காலம் மற்றும் நேரம், உலகின் மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இந்தத் தீவில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சூரியன் மறையாமல் இருக்கும். பின்னர் அதற்கு நேரெதிராக நவம்பரில் இருந்து ஜனவரி வரை சூரியன் மறைந்து இருட்டாகவே இருக்கும்.

sommaroy islanders want to go time free

அந்தவகையில், இப்போது அங்கு சூரியன் மறையாத காலகட்டம் நிலவுகிறது. கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கிய இது, அடுத்த மாதம் 26-ந் தேதி வரை 69 நாட்களுக்கு நீடிக்கும். தொடர்ந்து சூரியன் மறையாமல் இருப்பதால், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் நிறையவே மாறியிருக்கிறது.

sommaroy islanders want to go time free

இதனால் அவர்கள் தங்களது தீவை உலகின் முதல் நேரமற்ற மண்டலமாக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, அவர்கள் தங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வித்தியாசமான வாழ்க்கை முறை பற்றி, சொம்மாரோயி தீவில் வசிக்கும் கேஜெல் ஓவ் ஹெவ்டிங் என்பவர் கூறுகையில், “இது கொஞ்சம் பைத்தியக்காரத் தனமானது. ஆனால் அதே நேரத்தில் இது மிகவும் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயமும் கூட. கடிகார இயக்கத்தை நிறுத்திவைப்பதே இதற்கு சரியான தீர்வு” எனக் கூறுகிறார்.

English summary
Residents of a Norwegian island where the sun doesn’t set for 69 days of the year want to go “time-free” and have more flexible school and working hours to make the most of their long summer days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X