இது நிஜ தங்கல்....16 வயது சோனம் மாலிக் உலக மல்யுத்த போட்டியில் தங்கம் வென்று சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : உலக அளவிலான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே போன்று மற்றொரு வீரர் நீலம் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டிகள் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கணைகள் சோனம் மாலிக் மற்றும் நீலம் பங்கேற்றுள்ளனர். நான்காவது நாளாக நடைபெற்ற சாம்பியன் ஷிப் போட்டியில் 56 கிலோ எடைப்பிரிவில் சோனம் மாலிக் போட்டியிட்டார். ஜப்பான் வீராங்கனை செனா நகாமோட்டோ உடன் சோனம் நடத்திய பலப்பரீட்சையின் இறுதியில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி, சோனம் வெற்றி பெற்றார்.

Sonam Malik pocketed gold in world wrestling championship

இதே போன்று மற்றொரு இந்திய வீராங்கனையான நீலம், 43 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் 60 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் அனுஷு ஜப்பான் வீராங்கனை நயோமி ரூக்கியை இன்று எதிர்கொள்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian wrestler Sonam malik wins gold medal at World wrestling championship which is held at athens.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற