For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில் பதவி விலகும் தெரசா மே.. பந்தயத்தில் உள்ள 8 பேர்.. அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்.?

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி விலக உள்ள நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது.

தெரசா மேவால் ஐரோப்பியன் யூனியன் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியவில்லை.

Soon after the resignation of Theresa May .. 8 people in the race .. Who is the next Prime Minister of Britain?

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலகும் ஒப்பந்தத்தில் பிரிட்டன் எம்.பி-க்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயன்ற தெரசா மே, அடுத்தடுத்து தோல்வியை தழுவினார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3 முறை தாக்கல் செய்யப்பட்ட போதும், அதனை எம்பிக்கள் ஏற்று ஆதரவு தெரிவிக்காததால் நிராகரிக்கப்பட்டது.

இதனால் அரவது ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து விரக்தியடைந்த தெரசா மே, கடந்த வாரம் வரும் ஜூன் 7-ம் தேதி தனது கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியை ராஜினமா செய்ய உள்ளதாக அறிவித்தார். புதிய தலைவர் தேர்வாகும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பதாக கூறினார்.

பிரிட்டனில் நிலவி வரும் இந்த கடும் அரசியல் நெருக்கடி சூழலில், திட்டமிட்டப்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 3 நாள் பயணமாக இங்கிலாந்து வருகிறார். இதனையடுத்து அவர் தங்கள் நாட்டிற்கு வந்து போன பிறகே தெரசா மே பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார்.

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்.. சோனியா, ராகுல் மரியாதை.. டிவிட்டரில் மோடி அஞ்சலி! முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்.. சோனியா, ராகுல் மரியாதை.. டிவிட்டரில் மோடி அஞ்சலி!

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் இதுவரை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள் இணைந்துள்ளனர். பிரிட்டனின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மோரிஸ் ஜான்சனின் பெயர் தான் இந்த பட்டியிலில் முதலில் உள்ளது.

ஜெரிமி ஹன்ட், சர்வதேச மேம்பாட்டு செயலர் ரோரி ஸ்டீவார்ட், சுகாதார செயலர் மாட் ஹான்காக், எஸ்தர் மிக்வே உள்ளிட்டோரும் கன்சர்வேட்டிவ் தலைவருக்கான போட்டியில் உள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர்கள் தான் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்பர். இது குறித்து பேசிய அக்கட்சியை சேர்ந்த எம்.பி-யான ஆண்ட்ரியா லிட்சம், பிரிட்னின் பிரதமர் பதவிக்கு தாமும் போட்டியிடுவதாக கூறினார். வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்று செயல்பட தயாராக உள்ளதாக கூறினார்.

English summary
Theresa May withdrawal from the post of Prime Minister in Britain on June 7, the country's new Prime Minister has been raised around the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X