For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விர்ஜினிட்டி டெஸ்டில் பாஸ் செய்தால்தான் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப்.. தென் ஆப்பிரிக்க மேயர் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டர்பன்: விர்ஜினிட்டி அதாவது கன்னித்தன்மை சோதனைகளில் பாஸ் ஆகும் மாணவிகளுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று தென் ஆப்பிரிக்கா மேயர் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இளம் வயது கர்ப்பம், எச்.ஐ.வி, எய்ட்ஸ் அதிகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தென் ஆப்பிரிக்க மேயர் டுடு மசிபுகோ ஒரு சர்ச்சைக்குறிய ஐடியாவோடு களம் கண்டுள்ளார்.

அந்த ஐடியா இதுதான்.. அவ்வப்போது மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டு அதில் தேர்ச்சியடைவோருக்குதான் ஸ்காலர்ஷிப் தரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

பெண் உரிமை

பெண் உரிமை

தேர்வில் பாஸ் செய்தால் ஸ்காலர்ஷிப் என்றால் ஓ.கே.. விர்ஜினிட்டி டெஸ்டில் பாஸ் செய்ய வேண்டும் என்பது இழுக்கு அல்லவா என கொந்தளிக்கிறார்கள் பெண் உரிமை ஆர்வலர்கள்.

லீவுகளில் டெஸ்ட்

லீவுகளில் டெஸ்ட்

விடுமுறைக்காக வீடு திரும்பும்போதெல்லாம் மாணவிகள் இந்த சோதனைக்கு உட்பட வேண்டும். அந்த பெண்கள் விர்ஜினிட்டியை இழந்துவிட்டதாக தெரியவந்தால் ஸ்காலர்ஷிப் கட்.

எய்ட்ஸ் அதிகம்

எய்ட்ஸ் அதிகம்

தென் ஆப்பிரிக்காவில் 6.3 மில்லியன் பேருக்கு எய்ட்ஸ் வியாதி உள்ளது. அங்கு டீனேஜில் கர்ப்பமாகும் பெண்கள் எண்ணிக்கையும் அதிகமாகும்.

இளமை கர்ப்பம்

இளமை கர்ப்பம்

2013ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வேயில், அந்த நாட்டில் டீனேஜ் பருவத்தில் கர்ப்பமாகும் பெண்களின் சதவீதம் 40 விழுக்காடு என்ற அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
South Africa Mayor Dudu Mazibuko has launched “Maiden Bursaries” to provide young girls with funding on condition that they undergo regular virginity testing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X