For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒருநாள், ரெண்டு நாள் இல்ல.. ஒரு வருசமா கேஎப்சியை ஏமாற்றி சாப்பிட்ட மாணவர்.. இனி களி தான்!

ஒரு வருடமாக கேஎப்சியை ஏமாற்றி சாப்பிட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் ஒரு மாணவர் கடந்த ஒரு வருடமாக கேஎப்சியில் ஏமாற்றி சாப்பிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் க்வசுலு-நடால் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் கைது செய்யப்பட்ட மாணவர். 27 வயதான இவர் கடந்த ஒரு ஆண்டாக அங்குள்ள பல கேஎப்சி உணவகங்களில் ஏமாற்றி சாப்பிட்டு வந்துள்ளார்.

south african student arrested for cheating kfc

கேஎப்சியை ஏமாற்ற இவர் ஒரு டெக்னிக்கை பின்பற்றி வந்திருக்கிறார். அதாவது ஒரு கேஎப்சி உணவகத்திற்குள் நுழைந்து தான் தலைமை அலுவலத்தில் இருந்து வருகிறேன் எனக் கூறுவாராம். பின்னர் உணவின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி, தனக்கு பிடித்ததை ஆர்டர் செய்து சாப்பிடுவார். இதை அவர் கடந்த ஒரு வருடமாக பின்பற்றி வந்திருக்கிறார்.

கமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது.. ஜவாஹிருல்லா விளாசல்! கமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது.. ஜவாஹிருல்லா விளாசல்!

இந்நிலையில் கடைசியாக இதே மாதிரி ஏமாற்றிய போது, அந்த மாணவர் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த மாணவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களுடன் அவரை ஒப்பிட்டு, பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தென்னாப்பிரிக்கா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

English summary
In South Africa a 27 years old student was arrested by the police for cheating and eating full meals everyday for one year continously.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X