For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிம் ஜாங் உன் உடல் நிலை விவகாரம்- நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக தென்கொரியா தகவல்

Google Oneindia Tamil News

சியோல்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளி வரும் நிலையில் அந்நாட்டு நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆபத்தான கட்டத்தில் கிம் உடல் நிலை?

    கிம் ஜாங் உன்னின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பது ஊடகங்களின் செய்தி. இதனால் வடகொரியாவின் புதிய அதிபராக கிம் ஜாங்கின் சகோதரி பொறுப்பேற்பார் என்கின்றன அச்செய்திகள்.

    South Korea comments on Kim Jong Un Health row

    ஆனால் தென்கொரியா ஊடகங்கள் இச்செய்திகளை உறுதிப்படுத்தாமல் அதாவது பட்டும் படாமலேயே கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தென்கொரியா அதிபர் அலுவலகமும், வடகொரியாவில் கிம் ஜாங் வழக்கம் போல அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார்; அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என கூறியுள்ளது.

    மேலும் வடகொரியாவின் நிலைமையை தங்களது நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது; இதுவரை அங்கு வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் ஊடகம் ஒன்று தென் கொரியா அதிபர் மாளிகை அதிகாரிகள் அளித்த பேட்டி ஒன்றில், கிம் ஜாங் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர்.

    வெளியில் போக வழியில்லை.. வீட்டுக்குள்ளேயே பீச்சை உருவாக்கிய எமி.. என்னமா யோசிக்கிறாய்ங்க!வெளியில் போக வழியில்லை.. வீட்டுக்குள்ளேயே பீச்சை உருவாக்கிய எமி.. என்னமா யோசிக்கிறாய்ங்க!

    தென்கொரியாவின் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி யூன் சாங்க் ஹ்யூன் கூறுகையில், கிம் ஜாங்குக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்தன. இருப்பினும் தென்கொரியாவி உளவு அமைப்பால் இத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்கின்றன வேறு தகவல்கள்.

    இதனிடையே வடகொரியாவில் கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்ற வன்முறைகள் நிகழ்வதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன என்கின்றனர் வட கொரியா அரசியலை கண்காணித்து வரும் அரசியல் பார்வையாளர்கள்.

    English summary
    According to the South Korea’s presidential office, they said that no information about rumors regarding Kim Jong Un's health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X