For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ மை காட்.. 9 லட்சம் கோடிக்கு தங்கம், வைரம்.. கொரிய கடலில் கிடைத்த பழைய கப்பலில் புதையல்!

கொரிய கடல் பகுதியில் 113 வருடங்களுக்கு முன் காணாமல் போன டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற ரஷ்ய கப்பல் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கடலில் பழைய கப்பலில் கிடைத்த 9 லட்சம் கோடி மதிப்புள்ள புதையல்- வீடியோ

    சியோல்: கொரிய கடல் பகுதியில் 113 வருடங்களுக்கு முன் காணாமல் போன டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற ரஷ்ய கப்பல் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பல கோடி தங்கமும், வைரமும் இதில் இருந்த புதையலில் காணப்பட்டுள்ளது. இந்த புதையல் அப்படியே தென்கொரிய மியூசியத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

    இதேபோல் சில வாரங்களுக்கு முன் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 310 வருட பழமையான சான் ஜோஸ் கப்பலில் பெரிய புதையல் இருந்தது. ஆனால் இதன் மதிப்பு அதைவிட அதிகம் ஆகும் .

    கப்பல்

    கப்பல்

    இந்த கப்பல் ரஷ்யாவிற்கு சொந்தமானது. இதன் பெயர் டிமிட்ரி டோன்ஸ்கோய். 1885ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கப்பல் ரஷ்ய அரசிடம் 20 வருடம் வேலை பார்த்து இருக்கிறது. ரஷ்ய ஜப்பான் போரில், 1905ம் ஆண்டு மே, கொரிய தீபகற்ப கடலில் செல்லும் போது மூழ்கி காணமால் போய் இருக்கிறது. உள்ளேஉங்டோ என்ற தீவு அருகே உள்ள கடலில் அப்படியே காணாமல் போய் இருக்கிறது.

    எங்கே

    எங்கே

    இந்த நிலையில் அந்த கப்பல் அதே இடத்தில் இவ்வளவு வருடங்களாக இருந்துள்ளது. கொரியாவின் தனியார் கடல் ஆராய்ச்சி நிறுவனம் இதை கண்டுபிடித்து இருக்கிறது. கொரிய கடல் பகுதியிலேயே அது இருந்துள்ளது. டீப்வொர்க்கர் 2000 என்ற குழு இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர். கடலுக்கு அடியில் 480 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

    என்ன இருந்தது

    என்ன இருந்தது

    இந்த கப்பலில், மொத்தம் 5,500 பெட்டிகள் இருந்துள்ளது. இதில் முழுக்க முழுக்க தங்கம், வைரம் இருந்துள்ளது. இன்னும் சில பொருட்கள் காணாமல் போய் இருக்கிறது. இதில் அள்ள அள்ள தங்கமாக வந்துள்ளது. இதன் இப்போதைய மதிப்பு மட்டுமே ஏலம் விட்டால் ரூபாய் 9 லட்சம் கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    உரிமையாளர்

    உரிமையாளர்

    இது தென்கொரிய கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தங்கள் நாட்டு கடல் பகுதியில் கிடைத்ததால் விதிப்படி இது எங்கள் சொத்துதான் என்று கூறியுள்ளது. சர்வதேச கடல் விதிகளின்படி, இந்த புதையலை தென்கொரியா உரிமை கோர எல்லா உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த புதையல் ரஷ்யாவிற்கு திரும்ப செல்லாது.

    English summary
    South Korea finds Wrecked Russian warship which holds billions in gold. This treasure worth, Rs. 9.1 lakhs of crore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X