For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்கொரியாவில் முட்டாள்தனம்...வாஷிங் மெஷின்... மைக்ரோவேவில் ரூபாய் நோட்டு...ஏன்?

Google Oneindia Tamil News

சியோல்: தென்கொரியாவைச் சேர்ந்த கிம் என்பவர் கொரோனா வைரஸ் இருக்கும் என்ற அச்சத்தில் 3,26,952 மதிப்பிலான வோன் (அந்த நாட்டின் ரூபாய்) நோட்டுக்களை மைக்ரோவேவில் வைத்தார். இதனால் அவருக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் அவ்வாறு வைக்கக் கூடாது என்பது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது.

இவர் இப்படி செய்தார் என்றால் அந்த நாட்டின் அன்சான் நகரைச் சேர்ந்த மற்றொருவர் வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் செய்ததில், வோன் நோட்டுக்கள் சேதம் அடைந்தன. இவர் வாஷிங் மெஷினில் போட்ட வோன் நோட்டுக்களின் இந்திய மதிப்பு 3,150 ரூபாய்தான் என்றாலும், இந்த ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக சேதம் அடைந்த வோன் நோட்டுகளுக்கு முக மதிப்பிலான பணத்தை அந்த நாட்டின் வங்கி இவர்களுக்கு கொடுத்துள்ளது.

South Korea: people trying to wash the money on Washing machine and Microwave

அந்த நாட்டில் இதுபோன்ற தவறுகளால் ரூபாய் நோட்டுக்கள் சேதமடைந்தால், அதற்கு பதிலாக வேறு நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து விடுவார்கள். அதுவும் நோட்டு அடைந்து இருக்கும் சேதத்தைப் பொறுத்து கொடுப்பார்கள்.

நிறைமாத கர்ப்பிணி காவேரி.. டூவீலரில் வந்து இவர் செய்த காரியம் இருக்கே.. விக்கித்து நின்ற போலீஸ்நிறைமாத கர்ப்பிணி காவேரி.. டூவீலரில் வந்து இவர் செய்த காரியம் இருக்கே.. விக்கித்து நின்ற போலீஸ்

கொரோனா தொற்றை முன்னிட்டு அந்த நாடு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. கொரோனா தொற்று அச்சத்தில் ரூபாய் நோட்டுக்களை மைக்ரோவேவில் போட்டு சுத்தம் செய்வது, வாஷிங் மெஷினில் போடுவது, ஸ்டெர்லைஸ் செய்வது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்று அறிவித்து இருந்தது. அப்படி இருந்தும் அந்த நாட்டில் இவ்வாறு செய்வது தொடர் கதையாகி வருகிறது.

English summary
South Korea: people trying to wash the money on Washing machine and Microwave
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X