For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா!

Google Oneindia Tamil News

Recommended Video

    கூடங்குளம் கணினியை ஹேக் செய்தது வடகொரியா: தென்கொரியா தகவல்

    சியோல்: கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை திருடியது வடகொரியாதான் என்பதற்கான ஆதாரத்தை தென்கொரியா வெளியிட்டுள்ளது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் ஹேக்கிங் செய்யப்பட்டுவிட்டன. இதனால் இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் வடகொரியா ஹேக்கர்கள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    இங்கு ரகசிய தகவல்களை திருடுவதற்காக டிடிராக் ரேட் (D Track RAT) தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த வைரஸ்கள் பெரும்பாலான இடங்களில் பண மோசடி செய்யவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    சைபர் புகார்கள்

    சைபர் புகார்கள்

    இது போல் ஒரு ஹேக்கிங் நடக்கவில்லை என கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கமளித்தாலும் இந்திய அணுசக்தி கழகம் இதை அக்டோபர் 30-ஆம் தேதி உறுதிப்படுத்தியது. இதுகுறித்து சைபர் புகார்களை கவனிக்கும் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக கூறியது.

    ஆதாரம்

    ஆதாரம்

    இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கணினிகளில் இருந்து ஹேக்கிங் மூலம் தகவல்களை திருடியது வடகொரியாதான் என தென் கொரியா ஆதாரத்துடன் அடித்து கூறியுள்ளது. இதுகுறித்து issue makers lab என்ற சைபர் கிரைம் பாதுகாப்பு அமைப்பு தொடர் ட்வீட்களை வெளியிட்டுள்ளது.

    வடகொரியா

    இந்த திருட்டு பின்னால் தோரியம் குறித்த அணு மின் தகவல்களே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ட்விட்டரில் கூறுகையில் தோரியம் அணு ஆயுததொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிக்கிறது. கடந்த ஆண்டு முதல் இந்த தோரியத்தை மூலப்பொருளாக கொண்டு மின் உற்பத்தி செய்யும் டெக்னிக்கை திருட வடகொரியா முயற்சித்து வந்தது.

    வடகொரியாவில் பயன்பாடு

    மேலும் அந்த ஆய்வு அமைப்பு கூறுகையில் , கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் வடகொரியாவில் தயாரிக்கப்பட்ட கணினியை பயன்படுத்தியுள்ளார். மேலும் இந்த கணினிகள் வடகொரியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    பாஸ்வேர்டு

    பாஸ்வேர்டு

    மேலும் ஹேக்கரின் ஐபி முகவரி வடகொரியா தலைநகர் பியாங்யாங்கிலிருந்து வருகிறது. ஹேக்கர் குரூப் பி என்ற வைரஸை வடகொரியா பயன்படுத்துகிறது. ஹேக் செய்யப்பட்ட கணினியிலிருந்து கோப்புகளை வைரஸ் கம்ப்ரஸ் செய்ய dkwero38oerA^t@# என்ற 16 இலக்க பாஸ்வேர்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பாதிப்பு

    பாதிப்பு

    இந்த பாஸ்வேர்டை கொண்டு கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. டி டிராக் வைரஸின் கோடை வடகொரியா ஹேக்கர்கள் பயன்படுத்தியது சரிபார்க்கப்பட்டது. இதே வைரஸ்தான் கடந்த 2016-ஆம் ஆண்டு தென் கொரியா ராணுவ நெட்வொர்க் தொடர்பான தகவல்களை திருட பயன்படுத்தப்பட்டது என அடுக்கடுக்கான ஆதாரங்களை தென் கொரியா வைத்துள்ளது.

    English summary
    South Korea shares a series of proof that North Korea hacked Kudankulam Atomic power station's computers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X