For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்கொரியா: கங்னம் ஸ்டைலில் டான்ஸ் ஆடி சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் போலீசார்

Google Oneindia Tamil News

சியோல்: சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கு கங்னம் டான்ஸைக் கையில் எடுத்துள்ளது தென் கொரிய அரசு. அதாவது போலீஸ் படையினருக்கு கங்னம் டான்ஸ் ஸ்டைலில் அமைந்த உடையை சீருடையாக கொடுத்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது தென் கொரிய காவல்துறை.

மேலும் கங்னம் ஸ்டைலை அறிமுகப்படுத்தியவரான சையின் டிரஸ் மேக்கரிடமே இந்த டிரஸ்ஸையும் வடிவமைக்கும் பொறுப்பை அது கொடுத்துள்ளது.

தென் கொரிய சுற்றுலாப் பயணிகளுக்கான போலீஸாருக்குத்தான் இந்த நூதன சீருடை தரப்பட்டுள்ளதாம்.

இது கங்னம் ஸ்டைல்....

இது கங்னம் ஸ்டைல்....

இந்த புதிய சீருடையை சியோலில் அறிமுகப்படுத்தியுள்ளனர். சீருடை அணிந்த இந்த போலீஸார் கங்னம் டான்ஸும் அடி அனைவரையும் கவர்ந்திழுத்தனர்.

பிரத்யேகப் போலீசார்...

பிரத்யேகப் போலீசார்...

இந்த போலீஸார், சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக போலீஸார் ஆவர். தென் கொரியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பிறர் ஏமாற்றி விடாமல் தடுப்பதும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதும் இவர்களது வேலையாகும்.

கங்னம் ஸ்டைல் போலீஸ்....

கங்னம் ஸ்டைல் போலீஸ்....

உலகம் முழுவதும் பிரபலமான கங்னம் டான்ஸ் மற்றும் பாடலை கண்டுபிடித்த சை, தென் கொரியாவைச் சேர்ந்த பாப் பாடகர் ஆவார். இவரது கங்னம் ஸ்டைல் உலகையே கலக்கி விட்டது பழைய வரலாறு. கங்னமை பின்பற்றி எத்தனையோ விஷயங்கள் உலக அளவில் நடந்து விட்டன. இப்போதுதான் தென் கொரிய காவல்துறை கங்னமுக்கு மாறியுள்ளது.

சையின் ஆடை வடிவமைப்பாளர்....

சையின் ஆடை வடிவமைப்பாளர்....

சைக்கு உடைகளை வடிவமைத்துக் கொடுப்பவரே தற்போது தென் கொரிய சுற்றுலாப் போலீஸாருக்கும் டிரஸ் வடிவமைத்துள்ளார். நீல நீற ஜாக்கெட், டார்க் நிற டிரவுசர்கள், கிரே கலர் சட்டைகள், கூலிங் கிளாஸ் ஆகியவை இந்த சீருடையின் ஒரு பகுதியாகும்.

டான்ஸ் ஆடிய போலீசார்....

டான்ஸ் ஆடிய போலீசார்....

சியோலில் இதன் அறிமுக விழா நடந்தபோது கங்னம் பாடல் ஒலிக்கப்பட்டது. அதற்கேற்ப இந்த போலீஸார் புதிய சீருடை அணிந்து ஆடினர்.

இளம் போலீசார்....

இளம் போலீசார்....

மொத்தம் 100 இளம் ஆண் மற்றும் பெண் போலீஸார் இந்த சீருடையி்ல் காணப்பட்டனர். இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு புரியும் வகையிலான பேட்ஜ் அணிந்திருப்பார்கள். ஆங்கிலம், ஜப்பானிஸ், மாண்டரின் ஆகிய மொழிகளில் இந்த பேட்ஜ் இருக்கும்.

English summary
You've heard the song, you've seen the dance - now Gangnam Style, by South Korean pop star Psy, has become the inspiration for the country's tourist police. Psy's costume designer has created snappy uniforms for the new force, comprising bright blue jackets, dark trousers, grey shirts, sunglasses and black berets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X