For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரணமடைந்த மகள்.. அம்மா என்று ஓடி வந்த அதிசயம்.. தென் கொரியாவில் ஆச்சரியம்.. கை கொடுத்த விஆர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணீர் வர வைக்கும் காட்சி... இறந்துபோன மகளை சந்தித்த தாய்

    சியோல்: தென்கொரியாவில் இறந்து போன மகளை அவரது தாய் சந்திக்கும் அதிசயம் வர்சுவல் ரியாலிட்டி என்ற தொழில்நுட்பம் மூலம் நடந்துள்ளது.

    நம் குடும்பத்திலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை இத்தோடு எப்போது பார்ப்போம் என கூறி அழுவதுண்டு. அது நிதர்சனமான உண்மை.

    இறந்த நபர்களை கனவில் பார்த்தால் நமக்கு அந்த கனவு ஏன்தான் கலைகிறதோ என்ற ஏக்கம் இருக்கும். இதே இறந்த அன்புக்குரியவர்களை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்?

    ஆவணப்படம்

    ஆவணப்படம்

    இது ஒன்றும் ஜீபூம்பா கதையல்ல. நிஜமான ஒன்று. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அனைத்தும் சாத்தியம் என்பது வடகொரியாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு என்னவென்றே தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இறந்த தனது 7 வயது மகளை வர்சுவல் ரியாலிட்டி என்ற தொழில்நுட்பம் மூலம் சந்தித்த நிகழ்வு ஆவணப்படமாக வெளியிட்டுக்கிறது ஒரு அமைப்பு.

    ஆயத்தம்

    ஆயத்தம்

    ஆம் மீட்டிங் யூ என்ற அந்த திரைக்குழுவினரும் கொரியாவை சேர்ந்த எம்பிசி நிறுவனமும் இணைந்து சிறுமி நயோனின் உருவத்தை மிக நெருக்கமாக வடிவமைத்துள்ளது. ஸ்பெஷல் கிளவுஸ் போட்டு கொண்டு தனது மகளை பார்க்க ஆயத்தமானார் அந்த தாய். கிளவுஸுடன் தன் மகளின் நிழலை பார்க்கும் தாய் ஜாங் ஜி சங் தனது மகளை தொட முயற்சிக்கிறார்.

    கனவு

    கனவு

    இதுகுறித்து அந்த தாய் கூறுகையில் என் மகளை பார்க்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவை நான் நிறைவேற்றிக் கொண்டேன். என் மகளை கண்டவுடன் அவர் அம்மா என சிரித்து கொண்டே அழைத்தார் என்றார். இதற்காக அவர் விஆர் ஹெட்செட், கிளவுஸ் ஆகியவற்றை அணிந்து கொண்டார். இதன் மூலம் அந்த குழந்தையை தொடவும், அவர் பேசுவதை கேட்கவும் பார்க்கவும் முடியும். அந்த தாய் இறுதியில் மகளின் கன்னத்தில் கை வைத்து பார்க்கிறார். எத்தனை நெகிழ்ச்சியான சம்பவம் இது.

    வரிசையில்

    வரிசையில்

    அந்த சிறுமி தனது தாயுடன் பேசியுள்ளார். அப்போது தாயை தான் மிஸ் செய்வதாக தெரிவித்தார். இதனால் உணர்ச்சிவயப்பட்ட அந்த தாய் தானும் மிஸ் செய்வதாக தெரிவித்தார். பின்னர் தான் சோர்வாக இருப்பதாகவும் தூக்க வருவதாகவும் அந்த சிறுமி தாயிடம் கூறுகிறார். இந்த ஆவணப்படம் படமாக்கிக் கொண்டிருந்த போது அந்த சிறுமியின் தந்தை பார்வையாளர்கள் வரிசையில் கண்ணீருடன் உட்கார்ந்திருந்தார்.

    தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    இது போன்ற நெகிழ்ச்சியான சம்பவத்திற்கு பெரும்பாலானோர் மகிழ்ச்சி தெரிவித்தாலும் பலர் இதை உளவியல் ரீதியாக பார்க்கின்றனர். இந்த விர்சுவர் ரியாலிட்டி என்பது எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்யாமல் இதை ஊக்குவிப்பது தவறு என்கின்றனர். இந்த தொழில்நுட்பம் பெரும்பாலும் விளையாட்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    English summary
    An documentary film uses Virtual reality to reunite the mother and her deceased 7 years old daughter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X