For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தென் கொரியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.. நாளை நடக்கிறது

By Veera Kumar
Google Oneindia Tamil News

சியோல்: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தென் கொரியாவிலுள்ள தமிழ் நண்பர்கள் சார்பாக அறவழி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காளையை காட்சி விலங்கு பட்டியலில் முந்தைய மத்திய அரசு இணைத்ததன் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போதைய மத்திய அரசு இதுவரை அந்த விதிமுறையில் திருத்தம் கொண்டு வராத நிலையில் இந்த ஆண்டும், ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

South Korean Tamil friends organization will protest against Jallikkattu ban

இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனே நீக்க வலியுறுத்தி கொரியா தமிழ் நண்பர்கள் என்ற அமைப்பு சார்பாக அறவழி போராட்டம் நடைபெற உள்ளதாம்.

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டிற்கு உடனே அனுமதி வழங்க முயற்சி செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தியும், கொரியா தமிழ் நண்பர்கள் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (08.01.2017) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சியோல் தேசிய பல்கலைகழக வளாகத்தில் அறவழி போராட்டம் நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் உணர்வை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் நடைபெறும் இடம்: Line no 2 (Green Line), Station Name : Nakseongdae Station, Exit no:4
Take no 2 Bus and get down at SNU amphitheater, Bus stop name: SNU Amphitheater, Approximate travelling time 12-15 min from Nakseongdae Station என குறிப்பிடப்பட்டுள்ளது.

லோகநாதன் நாதன்- 010-3017-4428, ஆரோக்கியராஜ் செல்வராஜ், 010-4006-7121, ஹரிபாலன் பெருமாள் சாமி 010-2902-4695 ஆகியோரை இந்த எண்களில் அழைத்து போராட்டம் குறித்து அறியலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Korean Tamil friends organitation will protest against Jallikkattu ban on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X