For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவப்பெட்டிக்குள் 10 நிமிடம்.. வாழும்போதே மரண அனுபவம்.. திகிலடிக்க வைக்கும் தென் கொரியர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மரண அனுபவத்தை வாழும் போதே முயற்சி செய்யும் தென் கொரியர்கள்

    சியோல் : உயிருடன் இருக்கும்போதே மூடிய சவப்பெட்டிக்குள் 10 நிமிடங்கள் இருக்கும் அனுபவத்தை தென்கொரியர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த அனுபவத்தின்மூலம் வாழ்க்கையின் மதிப்பு தெரிவதாகவும் மீதமுள்ள வாழ்க்கையை அனுபவித்து வாழ முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    தென்கொரியாவில் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று கடந்த 2012 முதல் செய்துவரும் இந்த நடைமுறையில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    வாழும்போதே சாவை அனுபவித்துவிட்டு வரும் இந்த செய்கையில் இளைஞர்கள், முதியவர்கள் பாரபட்சமின்றி பங்கேற்கின்றனர். மேலும் இந்த நடைமுறையால் தென்கொரியாவில் தற்கொலை சாவுகள் குறைந்துள்ளதாக இதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

    போலீசார் போராட்டத்திற்கு பதிலடி.. டெல்லியில் இன்று வக்கீல்கள் போராட்டம்.. நீதிமன்ற புறக்கணிப்புபோலீசார் போராட்டத்திற்கு பதிலடி.. டெல்லியில் இன்று வக்கீல்கள் போராட்டம்.. நீதிமன்ற புறக்கணிப்பு

    வாழ்க்கையின் மதிப்பு

    வாழ்க்கையின் மதிப்பு

    தென்கொரியாவில் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் நிறுவனமான ஹியோவான் அந்நாட்டு மக்களுக்கு வாழும்போதே மரண அனுபவத்தை தருகின்றது. இதன்மூலம் வாழ்க்கையின் மதிப்பு புலப்பட்டு தற்கொலை எண்ணங்கள் தவிர்க்கப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் ஜியோங் யோங் மன் தெரிவித்துள்ளார்.

    இளைஞர்கள் ஆர்வம்

    இளைஞர்கள் ஆர்வம்

    இதன்படி ஆண், பெண், இளைஞர்கள், முதியவர்கள் பேதமின்றி ஒரே இடத்தில் சவப்பெட்டிக்குள் 10 நிமிடங்கள் இருக்க வைக்கப்படுகின்றனர். மரண அனுபவத்தை வாழும்போதே பெறும் இவர்கள், மீதமுள்ள தங்களது வாழ்க்கையை கொண்டாட்டத்துடன் வாழ துவங்குகின்றனர்.

    உலக சுகாதார மையம்

    உலக சுகாதார மையம்

    தென்கொரியாவில் கடந்த 2016ல் லட்சம் குடும்பங்களில் 20.2 சதவிகிதமாக தற்கொலைகள் இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவிலான தற்கொலைகளில் இந்த சதவிகிதம் இரண்டு மடங்கு ஆகும். இந்த தற்கொலைகளை குறைப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் என்று ஜியோங் யோங் மன் கூறியுள்ளார்.

    மரண அனுபவம் மிகமுக்கியம்

    மரண அனுபவம் மிகமுக்கியம்

    நம்முடைய வாழ்க்கை நிரந்தரமானதல்ல என்று தெரிவித்துள்ள ஜியோங், இந்த மரண அனுபவத்தின்மூலம், நமக்குள் மன்னிக்கும் மனப்பான்மை வளர்வதாகவும், இதன்மூலம் மீதமுள்ள வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழும் மனப்பான்மை வளர்வதாகவும் கூறியுள்ளார்.

    இளைஞர்களுக்கு கண்டிப்பாக தேவை

    இளைஞர்களுக்கு கண்டிப்பாக தேவை

    கடந்த 2012 முதல் இந்த நிகழ்வை நடத்தி வருவதாக தெரிவித்த ஜியோங், இதுவரை இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பல்கலைகழக மாணவர் சோய் ஜின் கியூ, இதன்மூலம் சக மனிதர்களை போட்டியாளர்களாக பார்க்கும் மனப்பான்மை நீங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    நிகழ்காலத்தில் மகிழ்ச்சி

    நிகழ்காலத்தில் மகிழ்ச்சி

    ஒருவரின் பிரிவால் மனம் வாடக்கூடாது என்று சோய் ஜின் கியூ கூறுகிறார். நிகழ்காலத்தில் மகிழ்ச்சி நிறைந்துள்ளதாக கூறும் அவர், இதை சோகத்தால் மனம் தளர்ந்து வாடுபவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கிறார்.

    English summary
    Happiness is in the present - message from who experience death
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X