For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரிய கிரகணம்... கீழிருந்து லட்சக்கணக்கானோர் பார்வை... மேலிருந்து 6 பேர் மட்டும்தான்

சூரிய கிரகணத்தை கீழிலிருந்து லட்சக்கணக்கானோர் பார்வையிட்ட நிலையில் விண்வெளியிருந்து சந்திரனின் நிழல் விழும் காட்சியை 6 விண்வெளி வீரர்கள் பார்வையிட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் நன்கு தெரிந்த சூரிய கிரகணத்தை பூமியிலிருந்து லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். அதேவேளையில் சூரியனை சந்திரன் மறைக்கும் நிழலை விண்வெளியிலிருந்து 6 வீரர்கள் பார்வையிட்டதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நடைபெற்றது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வந்து சூரியனை மறைப்பதுதான் சூரிய கிரகணம். இது அமெரிக்காவின் முக்கிய இடங்களில் நன்றாக பார்க்க முடிந்தது.

விண்வெளியிலிருந்து...

பூமியில் இருந்து சூரிய கிரகணத்தை பார்ப்பதைக் காட்டிலும் வானத்தில் விண்வெளியிலிருந்து பார்ப்பது மிகவும் வித்தியாசமான அனுபவத்தை பெற்று தரும். அந்த அனுபவத்தை பெறுவதற்காக நாசாவிலிருந்து 6 பேர் விண்வெளியிலிருந்து அந்த நிகழ்வை பார்வையிட்டனர்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இத்தாலி நாட்டு விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய நாட்டு விண்வெளி நிறுவனத்தின் வீரர் பாலோ நெஸ்போலி சூரியனை சந்திரன் மறைக்கும் புகைப்படங்களை சர்வதேச விண்வெளி நிறுவனத்துக்கு அனுப்பினார். அதை டுவிட்டரிலும் அவர் வெளியிட்டார்.

எது கிரகணம்?

எது கிரகணம்?

புகைப்படங்களில் 2 விண்வெளி நிறுவனத்துடன் காட்சியளிக்கும். அந்த புகைப்படங்களில் பூமிக்கு அருகே கருப்பு நிற வட்டமாக இருப்பதுதான் சந்திரன் மறைக்கும் பகுதியாகும்.

பெரிய நிழல்

பெரிய நிழல்

இந்த புகைப்படத்தில் உள்ளதை காட்டிலும் அந்த நிழலானது பெரிய அளவில் இருக்கும். இந்த அற்புத காட்சியை மண்ணில் இருந்து லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். ஆனால் விண்ணில் இருந்து 6 மட்டுமே பார்வையிட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

English summary
Millions of people saw Eclipse but only six people saw the umbra, or the moon's shadow, over the United States from space on Aug 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X