For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னும் 3 மாதத்தில் நிலவிற்கு செல்லும் ரகசிய மனிதர்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிரடி.. யார் அவர்?

அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

நிலவிற்கு மீண்டும் செல்வதில் அமெரிக்காவின் நாசா தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகிறது. இதில் நாசா மட்டுமில்லாமல், அமெரிக்காவின் மற்ற சில, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

ப்ளூ ஆர்ஜின், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப உள்ளது. அதில் முதலாவதாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு முக்கியமான நபரை நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.

அறிவித்தது

அறிவித்தது

நிலவு, மனிதன் மீண்டும் இதன் மீது தனது பார்வையை பதிக்க ஆரம்பித்துவிட்டான் என்றுதான் கூறவேண்டும். நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவோம் என்று அமெரிக்க அரசு ஒரு மாதம் முன் அறிவித்தது. இந்த நிலையில் நாசா இதில் களமிறங்கி பணியாற்றும் முன்பே, இன்னும் 3 மாதத்திற்குள் நிலவிற்கு மனிதர் ஒருவரை அனுப்ப உள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

அனுப்ப முடிவு

அனுப்ப முடிவு

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு இந்த டிசம்பருக்குள் மனிதர் ஒருவரை அனுப்ப உள்ளது. ஆனால் நிலவிற்கு என்றால் அவர் பெரும்பாலும் நிலவில் கால் பதிக்க வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை. சமயங்களில் நிலவின் சுற்றுப்பாதை வரை மட்டுமே செல்ல வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சமயத்தில் நிலவில் இறங்கவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

எப்படி அனுப்பும்

எப்படி அனுப்பும்

இதற்காக பல்கான் ஹெவி ராக்கெட்டில் (இதுதான் உலகில் பெரிய ராக்கெட்) சில மாற்றங்களை செய்து மனிதரை அனுப்ப உள்ளது ஸ்பேஸ் எக்ஸ். இதற்காக பிக் பல்கான் ஹெவி என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. இதில்தான் பெரும்பாலும் வானில் உள்ள ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு பொருட்களை அனுப்பி வருகிறது. தற்போது இதையே மனிதர்களை அனுப்பவும் பயன்படுத்த உள்ளது ஸ்பேஸ் எக்ஸ்.

ரகசியம்

ரகசியம்

ஆனால் நிலவிற்கு அனுப்பப்படும் அந்த நபர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவர் பெயர் என்ன என்று கூறவில்லை. அவர் நாடு என்ன என்றும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள். அவர் எவ்வளவு பணம் கொடுத்து பறக்கிறார் என்றும் கூறவில்லை. வரும் செப்டம்பர் 17ம் தேதில் இந்த விவரங்களை வெளியிட உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

யார் இவர்

யார் இவர்

உலகின் மிக முக்கியமான புத்திசாலிகளில் ஒருவர் என்று எலோன் மஸ்க் கருதப்படுகிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான இவர்தான் தன்னுடைய டெஸ்லா நிறுவன காரை செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு மாதம் முன்பு அனுப்பியது. உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஒன்று.

English summary
Space X will send an UNKNOWN man to the moon by this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X