For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டீபன் ஹாக்கிங் குரலை விண்வெளிக்கு அனுப்பும் விஞ்ஞானிகள்.. கருந்துளை நோக்கி செல்லும் ஒளி!

பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் தற்போது விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

லண்டன்: பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் தற்போது விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. புதிய தொழில்நுட்பம் மூலம் அந்த குரல் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், கருத்துளைக்கு அனுப்பப்பட உள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்தார். இவரது வாழ்க்கை ஒரு அறிவியல் ரோலர் கோஸ்டர் பயணம் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்தில் லண்டனில் பிறந்த இவர் பல விண்வெளி ஆராய்ச்சிகளை நிகழ்த்து உள்ளார்.

இவரின் பிக் பேங்க், பிளாக் ஹோல் எனப்படும் பெரு வெடிப்பு, கருந்துளை கொள்கை இப்போதும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பிக் பேங்க் மூலம்தான் உலகம் உருவானது, எதோ ஒரு பிளாக் ஹோல் மூலம்தான் உலகம் அழியும் என்றார்.

உடல் அடக்கம்

உடல் அடக்கம்

இவர் ஐன்ஸ்டின் மற்றும் நியூட்டனுக்கு நிகராக மதிக்கப்படுகிறார். இதன் காரணமாகவே, அவரது உடல் இந்த இருவரின் சமாதிக்கு இடையில் புதைக்கப்பட்டுள்ளது. இவரின் குரல் மாதிரிகள் பல சரியான துல்லியத்துடன் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான குரல்

அமைதிக்கான குரல்

இந்த நிலையில் இவரின் குரலை ''வாங்கிளிஸ்'' என்ற கிரீக் இசையமைப்பாளர் பாடலாக மாற்றியுள்ளார். இடையிடையே அவர் பேசுவதும் இதில் வருகிறது. இந்த பாடல் மொத்தம் 6.30 நிமிடம் இருக்கிறது. அவரின் இந்த குரலை அமைதிக்கான குரல் என்று கூறுகிறார்கள். உலக அமைதியை முன்னெடுக்கும் வகையில் இந்த குரல் இருப்பதாக கூறியுள்ளனர்.

விண்வெளிக்கு

விண்வெளிக்கு

ஸ்பெயின் விஞ்ஞானிகள் இந்த பாடலை தற்போது விண்வெளிக்கு அனுப்ப உள்ளனர். 3500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கருந்துளை ஒன்றிற்கு இந்த குரலை அனுப்ப உள்ளனர். அந்த கருந்துளையின் வடிவமைப்பு காரணமாக, அந்த குரல் அந்த பகுதியில் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவில்

விரைவில்

இன்னும் சில நாட்களில் இதை அனுப்ப உள்ளனர். இதற்காக ஸ்பெயினில் பெரிய ஒளி அனுப்பும் கருவி ஒன்றை அமைத்துள்ளனர். உலகில் யாருக்கும் இவ்வளவு பெரிய மரியாதை கொடுக்கப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த ஒளி அனுப்பப்படும் அதே நாளில், அந்த பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

English summary
Spain Scientists to send Stephen Hawking voice to Black Hole which is 3500 light years away from earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X