For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிம்- ட்ரம்ப் சந்திப்பு.. சென்டோசா தீவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நேபாள கூர்க்காக்கள்!

கிம் - ட்ரம்ப் சந்திப்பு நடைபெறவுள்ள சென்டோசா தீவில் 1800 கூர்க்காக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ட்ரம்ப், கிம் ஜான் சந்திப்பிற்கு பாதுகாப்பிற்கு கூர்காக்கள் நியமிப்பு- வீடியோ

    சிங்கப்பூர்: கிம் - ட்ரம்ப் சந்திப்பு நடைபெறவுள்ள சென்டோசா தீவில் 1800 கூர்க்காக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நாளை சந்திக்கவுள்ளனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு சிங்கப்பூரில் நாளை நடைபெறுகிறது.

    கீரியும் பாம்புமாக இருந்த இருநாட்டு தலைவர்களும் நாளை சந்திக்க இருப்பது உலக நாடுகளிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது. நாளைய சந்திப்பு எப்படி இருக்கும் என உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

    பலத்த பாதுகாப்பு

    பலத்த பாதுகாப்பு

    நாளைய சந்திப்பை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிட் ஜாங் உன் சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளனர். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாளை சந்திப்பு

    நாளை சந்திப்பு

    அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வட கொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரின் அழகு கொஞ்சும் சென்டோசா தீவில் சந்திக்கவுள்ளனர். சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் நாளை சந்திக்கின்றனர்.

    தீவு முழுவதும்

    தீவு முழுவதும்

    ட்ரம்ப் - கிம் சந்திப்பிற்காக நேபாளத்தை சேர்ந்த 1800 கூர்காக்கள் ஸ்பெஷலாக பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர். இந்த கூர்க்காக்கள் டிரம்ப்-கிம் சந்திப்பு நடக்கவுள்ள சென்டோசா தீவு முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கூர்க்காக்கள் மகிழ்ச்சி

    கூர்க்காக்கள் மகிழ்ச்சி

    இவர்களிடம் துப்பாக்கியுடன் கூர்மையான கத்தியும் உள்ளது. இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு பாதுகாப்பாக இருப்பது பெருமையாக உள்ளதாக கூர்க்காக்கள் மக‌ழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    அரசே ஏற்றுக்கொள்ளும்

    அரசே ஏற்றுக்கொள்ளும்

    இதனிடையே, ட்ரம்ப் - கிம் சந்திப்புக்காக சுமார் நூறு கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்தச் செலவைச் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Special Gurkhas has been deployed in Singapore for the meet of Kim and Trump. Arround 1800 Gurkhas is on work in Singapore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X