For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பான்...அடுத்தது இவர்தான் பிரதமரா...அரசியலில் அதிரடி மாற்றம்!!

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஷின்சோ நீக்கப்பட்டு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைக் கூட்டி அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்டாது. தொடர்ந்து ஷின்சோ தலைமையில் இருந்த அமைச்சரவையே தொடரும். ஆனால், புதிய பிரதமர் பதவியேற்கும் வரை எந்த புதிய கொள்கைகள் அல்லது திட்டங்களை நிறைவேற்ற முடியாது. கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர்தான் பிரதமராக வருவார். சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு நாடாளுமன்றத்தின் கீழவையில் போதிய பலம் இருப்பதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

Speculation about next Prime Minister in Japan after Shinzo abe resignation

வழக்கமாக, கட்சி தனது தலைவருக்கான தேர்தலை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்க வேண்டும். அதன் எம்.பி.க்கள் அடிமட்ட உறுப்பினர்களுடன் இணைந்து வாக்களிப்பார்கள். ஆனால், தற்போது ஷின்சோ திடீரென ராஜினாமா செய்து இருப்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த பிரதிநிதிகள் கூடி விரைவில் புதிய தலைவரை தேர்வு செய்யலாம். கூடிய விரைவில் கூட்டத்திற்கான தேதியை கட்சி அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஷின்சோ அபே ராஜினாமா செய்து இருப்பதால், தற்போது நிதியமைச்சராக மற்றும் துணைப் பிரதமராக இருக்கும் 79 வயது அசோ என்பவரை கட்சியின் தலைவரை தற்காலிகமாக தேர்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது. 2008ஆம் ஆண்டில் கட்சியின் தலைவராக, பிரதமராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அந்த அனுபவத்தில் இவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இவரது தேர்வையடுத்து 2009ல் நடந்த தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சி தோல்வியை சந்தித்து இருந்தது.

இவருக்கு அடுத்து முன்னாள் ராணுவத்துறை அமைச்சராக இருந்த இஷிபாவுக்கு வாக்காளர்களிடம் செல்வாக்கு உள்ளது. ஆனால், கட்சியில் செல்வாக்கு இல்லை. இவர் தொடர்ந்து பல கட்டங்களில் ஷின்சோவை விமர்சித்து வந்துள்ளார்.

ஆண்ட்ரமேடாவில் ஒளிவட்டம்.. விண்வெளி ஆய்வில் மைல்கல்.. ஹப்பிள் தொலைநோக்கியின் வாவ் கண்டுபிடிப்பு!ஆண்ட்ரமேடாவில் ஒளிவட்டம்.. விண்வெளி ஆய்வில் மைல்கல்.. ஹப்பிள் தொலைநோக்கியின் வாவ் கண்டுபிடிப்பு!

இவருக்கு அடுத்து கட்சியில் பலம் பொருந்தியவராக இருக்கும் விவசாயத்துறை அமைச்சருக்கு எம்பிக்களிடம் செல்வாக்கு இல்லை. கடந்த 2012ல் கட்சி தலைமைக்கு நடந்த தேர்தலில் முதல் சுற்றில் ஷின்சோவை தோற்கடித்தார். ஆனால், இரண்டாம் சுற்றில் எம்பிக்கள் ஷின்சோவுக்கு வாக்களித்தனர். 2018ல் நடந்த கட்சி தேர்தலின்போதும். ஷின்சோ அபேவிடம் இஷிபா தோற்றார்.

இவர்களது பெயர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மொட்டேகி, சுகாதாரத்துறை அமைச்சர் காடோ, 39 வயதாகும் சுற்றுச்சூழல் அமைச்சர் கொய்சுமிக்கும் செல்வாக்கு இருக்கிறது. இவர்களில் முன்னாள் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமியின் மகன்தான் கொய்சுமி. இவருக்கு ஜப்பானில் எதிர்காலம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இவருக்கு இப்போதே பிரதமருக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால். வயதும் ஒரு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Speculation about next Prime Minister in Japan after Shinzo abe resignation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X