For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் பெரிய மாநாடு நடத்திய உலகின் முக்கிய உளவு அமைப்புகள்.. என்ன காரணம்?

உலகில் சில முக்கிய நாடுகளின் உளவு அமைப்பின் இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து, கூட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானில் நடந்த உலகின் முக்கிய உளவாளிகள் ஆலோசனை கூட்டம்- வீடியோ

    இஸ்லாமாபாத்: உலகில் சில முக்கிய நாடுகளின் உளவு அமைப்பின் இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து, கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆசிய கண்டத்தில் இது மிக முக்கியமான கூட்டமாக பார்க்கப்படுகிறது.

    உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்காக மற்ற நாடுகளில் உளவாளிகளை வைத்து இருக்கிறார்கள். அதேபோல் தீவிரவாத இயக்கங்களிலும் கூட உளவாளிகளை நுழையவிட்டு, முக்கியமான தகவல்களை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் உலகின் முக்கியமான, சில உளவு குழுக்களின் தலைவர், ஒன்றாக சேர்ந்து கூட்டம் நடத்தினால் எப்படி இருக்கும்? அதுவும் பாகிஸ்தானில் நடந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் ஒரு கூட்டம், நேற்று நடந்து இருக்கிறது.

     எந்தெந்த நாடுகள்

    எந்தெந்த நாடுகள்

    இந்த கூட்டத்தில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், ஆகிய நாடுகள் கலந்து கொண்டு இருக்கிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிற்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அமெரிக்கா மட்டுமே. ஆம், அமெரிக்காவிற்கு எதோ ஒரு வகையில் இந்த நாடுகள் எல்லாம் எதிரான நிலைப்பாடுகள் எடுத்துள்ளது. இப்போதுதான் சில நாட்கள் முன்பு அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் பிரச்சனை பெரிதானது.

     கூட்டியது யார்

    கூட்டியது யார்

    இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியது பாகிஸ்தான். ஆம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அதேபோல், அதே அமைப்புதான், பல்வேறு நாடுகளில் இருந்து, சரியாக முழு பாதுகாப்புடன் உளவு இயக்க இயக்குனர்கள், தலைவர்கள் பாகிஸ்தானிற்கு கொண்டு வந்தது.

     பிரச்சனை என்ன

    பிரச்சனை என்ன

    இதில் மிகவும் முக்கியமான விஷயம் இரண்டு பேசப்பட்டுள்ளது. 1. அமெரிக்கா இந்த நான்கு நாடுகளின் அரசியலில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அதைபற்றி இதில் விவாதித்து இருக்கிறார்கள். 2.ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சி குறித்து பேசியுள்ளனர்.

     பெரிய திருப்பம்

    பெரிய திருப்பம்

    ஆப்கானிஸ்தானில் தற்போது, ஐஎஸ் அமைப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. அதவாது ஆப்கானிஸ்தானில் சில முக்கிய இடங்களை ஆக்கிரமித்து அதை தனி நாடாக, தனி மாகாணமாக அறிவிக்கும் எண்ணத்தில் அந்த தீவிரவாத இயக்கம் இருக்கிறது. இதை தடுக்கவும் இதில் சில முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.

    English summary
    Spy Intelligence chief of China, Russia, Iran hold meet in Pakistan to discuss against US and ISIS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X