For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய 4 லஸ்கர் தீவிரவாதிகள் பாக்-ல் சுட்டுக் கொலை

By Mathi
Google Oneindia Tamil News

லாகூர்: இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 4 லஸ்கர் இயக்க தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் இன்று சுட்டுக் கொன்றதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூரின் மனவான் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்றனர். அப்போது பாதுகாப்புப் படையினர் மீது 7 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது.

Sri Lanka cricket team attack: 4 Lashkar-e-Jhangvi terrorists killed by Pakistan

இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்; 3 பேர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் ஜுபைர் என்ற நைக் முகமது, அப்துல் வஹாப், அட்னான் அர்ஷாத், ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டது. இந்த 4 பேரும் 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் 2008-ம் ஆண்டு லாகூர் மூன் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்தியதும் இந்த தீவிரவாதிகளே என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

English summary
Four Lashkar-e-Jhangvi (LeJ) terrorists who were allegedly involved in the attack on Sri Lankan cricket team in 2009 were shot dead by Pakistan police in the wee hours today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X