For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வறிக்கை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

ஸ்ரீதேவியின் உடலுக்கு மீண்டும் உடற்கூறாய்வு சோதனை நடத்த எவ்வித திட்டமும் இல்லை என்று துபாய் போலீஸ் தெரிவித்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர தாமதம் ஏன்?- வீடியோ

    துபாய்: ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதேவி, போனி கபூர், மகள் குஷி ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

    Sridevi's body to be done autopsy for 2nd time

    அவரது உடலுக்கு நேற்று விரிவான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு துபாயில் அலுவலக நேரம் முடிவடைந்து விட்டதால் இறப்பு சான்றிதழ் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இன்று அவரது உடல் மாலை 3.30 மணிக்கு துபாயிலிருந்து அவரது உடல் மும்பைக்கு இரவு 7 மணிக்கு கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வறிக்கை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    உடற்கூறு ஆய்வறிக்கை அளிக்கப்பட்டதால் உடலை எம்பாமிங் (பதப்படுத்தல்) பணி தொடங்கப்படும். உடற்கூறு ஆய்வறிக்கையின் நகல் ஒன்று ஸ்ரீதேவியின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    உடற்கூறு ஆய்வறிக்கையை துபாய் போலீஸிடம் ஒப்படைத்த பிறகே அவரது உடல் எப்போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் என்பது தெரியவரும். இன்று இரவு அவரது உடல் மும்பைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படும்.

    English summary
    Dubai Police says that there will be no plan to do autopsy for Sridevi for 2nd time. Its all of because of blood laboratory report getting late.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X