For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்க வராதீங்க அப்டீயே போய்டுங்க... நமல் ராஜபக்சேவை விரட்டிய அமெரிக்கா!

ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த நமல் ராஜபக்சேவிற்கு அந்த நாடு அனுமதி மறுத்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

மாஸ்கோ: இலங்கை எம்பி நமல் ராஜபக்சே தனக்கு அமெரிக்கா அந்த நாட்டிற்குள் வர விடாமல் தடை விதித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலை பார்ப்பதற்காக தனிப் பார்வையாளராக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றிருந்தார். அங்கு அவர் 2 அதிகாரப்பூர்வ கூட்டங்களிலும் பங்கேற்றார்.

Srilanka MP Namal Rajapaksa denied entry to US

மாஸ்கோவில் இருந்து நமல் அமெரிக்கா செல்லதிட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் அமெரிக்கா வர அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் நமலுக்கு தடை விதித்துள்ளது. இது குறித்து நமல் ராஜகப்சேவின் அலுவலகத்தினர் கூறிய போது " நமலுக்கு சரியான விசா இருந்தும் அமெரிக்காவிற்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டனர். இது குறித்து மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நமல் ராஜபக்சே "மாஸ்கோவில் உள்ள எமிரேட்ஸ் ஏர் விமான நிறுவனத்தினர், நான் ஹோஸ்டன் விமானத்தில் பயணிக்க முடியாது என்று கூறினர். ஏனெனில் எனக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது என்று கூறுகின்றனர். எதற்காக எனக்கு அனுமதி இல்லை என்று இதுவரை கூறவில்லை."

அமெரிக்கா இறையாண்மை மிக்க நாடு, உன்னுடைய பெயரில் எந்த அதிருப்தியும் அவர்களுக்கு இருக்காது. ஒருவேளை அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நான் இலங்கையின் எதிர்க்கட்சி என்பதாலா அல்லது நான் ரஷ்யாவில் இருந்து வருகிறேன் என்று அவர்களுக்கு பிடிக்கவில்லையா என்றும் நமல் ட்வீட்டியுள்ளார். அமெரிக்காவிற்குள் நுழைய நமலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் கொழும்புக்கே திரும்ப திட்டமிட்டுள்ளார்.

English summary
Sri Lankan MP Namal Rajapaksa said he was denied entry to the US from Russia. Namal tweeted that "Emirates Air #Moscow informs I won’t make my Houston Flight as #US Officials instruct them to not let me board."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X