For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டார்பக்ஸ் காபியில் புற்றுநோய் வேதிப்பொருட்கள்.. எச்சரிக்கை விடுக்கும் கலிபோர்னிய நீதிபதிகள்

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் விற்கப்படும் காபியில் அதிக அளவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் விற்கப்படும் காபியில் அதிக அளவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இது சம்பந்தமாக ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட துரித உணவு கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் முக்கியமான பல உணவுக்கட்டுப்பாடு விதிகளை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கடைபிடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்டார்பக்ஸ் இந்தியாவிலும் நிறைய கிளைகளை கொண்டுள்ளது. முக்கியமாக சென்னையில் சமீபத்தில் சில கிளைகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எந்த கடைகள்

எந்த கடைகள்

ஸ்டார்பக்ஸ் மட்டுமில்லாமல் பல பெரிய துரித உணவு கடைகளுக்கு இந்த நோட்டிஸ் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மெக்டொனல்ட்ஸ், டன்கின் டோனட்ஸ் ஆகிய கடைகளுக்கும் இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர்கள் வழங்கும் காபி, கூல்டிரிங்ஸ் ஆகியவற்றில் அதிக அளவில் வேதிப்பொருள் இருக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.

வேதிப்பொருள்

வேதிப்பொருள்

இதில் கலந்து இருக்கும் அதிகப்படியான வேதிப்பொருட்கள் புற்றுநோயை உருவாக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். காபியில் அதிக சுவை கொடுக்க வேண்டும் என்று சில தேவையில்லாத வேதிப்பொருட்களை அதிகமாக கலப்பதாக கலிபோர்னியா நீதிபதிகள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். முக்கியமாக வடிகட்டிய காபிக்களில் இதுபோன்ற வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

கொடுக்கவில்லை

கொடுக்கவில்லை

இந்த நிலையில் காபியில் அதிக அளவில் வேதிப்பொருட்கள் கலக்கவில்லை என்று ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை இதுவரை அந்த நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் கொடுக்கவில்லை. இதனால் முதற்கட்ட விசாரணையில் அந்த நிறுவனம் தோல்வியை தழுவி இருக்கிறது.

படங்கள் ஓட்ட வேண்டும்

படங்கள் ஓட்ட வேண்டும்

இதன் காரணமாக புகையிலை பொருட்களில் இருப்பது போல காபி கப்களிலும் புற்றுநோய் எச்சரிக்கை புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். காபி மூலம் எப்படி புற்றுநோய் ஏற்படுகிறது என்ற எச்சரிக்கை வசனத்துடன், புகைப்படம் இடம்பெற்ற கப்புகளை பயன்படுத்த நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

English summary
Starbucks Coffee might have Cancer agents, says California Judge. He says that their coffe contains too many of chemical components which may cause cancer for human.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X