For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பக்கத்துவீட்டு வை-பையை திருட்டுத்தனமாக பயன்படுத்துகிறீர்களா?: இதோ பத்வா விட்டாச்சு

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: பக்கத்து வீட்டுக்காரர்களின் வை-பை சிக்னலை திருடுவதற்கு எதிராக பத்வா விடப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலான வீடுகளில் வை-பையை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் வை-பையை பாஸ்வேர்டுடன் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருந்தும் சிலர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் வை-பையை திருட்டுத்தனமாக பயன்படுத்துவதும் நடக்கிறது.

Stealing your neighbour's WiFi signals? It is immoral, says Islamic fatwa

இந்நிலையில் துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கை துறை பக்கத்துவீட்டுக்காரர்களின் வை-பையை திருட்டுத்தனமாக பயன்படுத்துவதற்கு எதிராக பத்வா வெளியிட்டுள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள பத்வாவில் கூறப்பட்டிருப்பதாவது,

பக்கத்து வீட்டுக்காரர்களின் வை-பையை திருடுவது இஸ்லாத்தின்படி சரி அல்ல. உங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களின் வை-பையை பயன்படுத்த அனுமதித்தால் மட்டுமே நீங்கள் பயன்படுத்தலாம் இல்லை என்றால் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Dubai's top religious authorities issued fatwa against stealing one's neighbour's WiFi signals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X