For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பிக் பேங்க்" முதல் "பிளாக் ஹோல்" வரை.. நாற்காலியில் உட்கார்ந்து அறிவியலை ஆண்ட ஸ்டீபன் ஹாக்கிங்

பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்து இருக்கிறார். இவரது வாழ்க்கை ஒரு அறிவியல் ரோலர் கோஸ்டர் பயணம் என்று கூட சொல்லலாம்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டிரம்ப் குறித்து எச்சரித்த ஸ்டீபன் ஹாக்கிங்..வீடியோ

    லண்டன்: பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்து இருக்கிறார். இவரது வாழ்க்கை ஒரு அறிவியல் ரோலர் கோஸ்டர் பயணம் என்று கூட சொல்லலாம்.

    இங்கிலாந்தில் லண்டன் அருகில் சிறிய நகரத்தில் பிறந்துவிட்டு, 50 வருடங்கள் அறிவியல் உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தார் ஸ்டீபன். தொடக்க காலத்தில் அப்பா ஆசைப்படி மருத்துவர் ஆக ஆசைப்பட்டார்.

    பின் தன்னுடைய ஆசைப்படி கிளாசிக்கல் சங்கீதம் கற்றுக்கொண்டு பாடகர் ஆக ஆசைப்பட்டார். ஆனால் அவருக்காக உலகம் பல ஆச்சர்யங்களுடன் காத்து இருந்தது.

    காசு இல்லை

    காசு இல்லை

    இவர் பள்ளியில் பீஸ் கட்ட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். இதற்காக இவருக்கு விருப்பமான வெஸ்டிமின்ஸ்டர் பள்ளியில் சேர முடியாமல் வீட்டில் முடங்கி போய் இருக்கிறார். கடைசியில் செயின்ட் அல்பான்ஸ் என்னும் சிறிய பள்ளியில் சேர்ந்தார். இவரது பிக் பேங்க் அந்த சிறிய பள்ளியில்தான் தொடங்கியது.

    முட்டாள்

    முட்டாள்

    இவரை இவரது சக நண்பர்கள் பள்ளியில் ஐன்ஸ்டின் என்று அழைத்து வந்தார்கள். இவர் அப்போது எதையும் புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக இருந்தார். ஐன்ஸ்டின் அவருடைய சிறுவயதில் அப்படித்தான் இருந்தார். அதன் காரணமாகவே அப்படி அழைத்தார்கள். இருவருமே வளர்ந்த பின் அறிவியலை மாற்றியது வரலாறு.

    உடல் முடக்கம்

    உடல் முடக்கம்

    இவருக்கு 21 வயது இருக்கும் போது ''மோட்டார் நியூரான்'' பாதிக்கப்பட்டது. இது ''அமியோடிராபிக் ஸ்கிலோரோசிஸ்'' வகையை சார்ந்த நரம்பியல் குறைபாடு ஆகும். இதனால் இவர் உடல் மொத்தமும் இயங்காமல் போனது. கழுத்துக்கு கீழ் இவரால் எதையும் அசைக்க முடியவில்லை.

    2 வருடத்தில் இறந்துவிடுவார்

    2 வருடத்தில் இறந்துவிடுவார்

    இவர் இரண்டு வருடத்தில் இறந்து விடுவார் என்று 23 வயதை கடைசி வருடமாக டாக்டர்கள் குறித்தார்கள். ஆனால் அப்போதும் கூட மனம் தளராமல், இவர் கேம்பிரிட்ஜில் டாக்டர் பட்டம் படிக்க சென்றார். அந்த தன்னம்பிக்கைதான் இவரது வாழ்க்கையை மாற்றியது.

    கண் மூலம் பேசினார்

    கண் மூலம் பேசினார்

    இவருக்காக ''ஸ்பீச் டிரான்ஸ்லேட்டர்'' தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டது. இவர் கண்களில் ஏற்படும் அசைவுகள் வார்த்தைகளாக மாற்றப்பட்டது. அதை வைத்து இவர் செய்த சாதனைகள் பல. பேட்டிகள் கொடுத்தார், புத்தகம் எழுதினார், நாடகத்தில் நடித்தார், மொத்த அறிவியல் உலகையே கட்டுக்குள் வைத்து இருந்தார்.

    அசாத்தியம்

    அசாத்தியம்

    50 வருடங்கள் இவர் ஒரே இருக்கையில் இருந்தார். ஆனால் உலகமே இவரை சுற்றி வந்தது. 9 கிரகம் சூரியனை சுற்றுவது போல. ஒரு முறை அவரது வீட்டில் பெரிய விருந்து ஏற்பாடு செய்துவிட்டு, எதிர்கால சந்ததிக்காக காத்து இருந்தார். ஆனால் அப்போது யாரும் டைம் டிராவல் செய்து அவரை பார்க்க வரவில்லை. அப்போது அவர் இப்படி கூறினார் ''இப்போது என்னை யாரும் பார்க்க வரவில்லை. ஆனால் ஒருநாள் நீங்கள் எதிர்காலத்தில் இருந்து யாரையாவது பார்க்க கடந்த காலத்திற்கு செல்வீர்கள்'' என்று குறிப்பிட்டார்.

    காஸ்மிக், கருந்துளை

    காஸ்மிக், கருந்துளை

    காஸ்மிக் (அண்டம்) குறித்து ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கு இவர்தான் காரணம் என்று சொல்லலாம். ஏன் இவர் மட்டும்தான் காரணம் என்று கூட குறிப்பிடலாம். அதே போல உலகமே பெருவெடிப்பு எனப்படும் பிக் பேங்க் குறித்து பேசிய போது, இவர் மட்டும்தான் கருந்துளை எனப்படும் பிளாக் ஹோல் குறித்து பேசினார். பிளாக் ஹோல் தான் இந்த பிரபஞ்சத்தின் முடிவாகும்.

    English summary
    Stephen Hawking passes away at an age of 76 in London.Stephen Hawking ruled Science for last 50 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X