For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழிலதிபர் அதானி நிலக்கரி திட்டத்திற்கு அலை அலையாய் ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

கான்பெரா: தொழிலதிபர் அதானியின் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவின் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியாவிலுள்ள மின் திட்டங்களுக்காக ஆஸ்திரேலியாவிலுள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை எடுத்துவரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார் அதானி. இதற்காக ஆஸ்திரேலிய வங்கிகளில் கடன் பெற அதானி திட்டமிட்டுள்ளார்.

StopAdani campaign in Australia

இதனிடையே நிலக்கரி சுரங்கத்தால் வடக்கு ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று குற்றம்சாட்டியுள்ளனர் அந்த நாட்டு சுற்றுச்சூழல் நிபுணர்கள். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். மக்கள் கூடும் இடங்களிலும் பதாகைகளுடன் நிற்க தொடங்கியுள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

வங்கிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு போய், ஆஸ்திரேலியாவின் வரி செலுத்தும் மக்கள் பணத்தை வீண் செய்ய கூடாது என்ற வாசகங்களுடன் பதாகைகளை ஏந்த சமூக வலைத்தளங்களில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதானிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

#StopAdani என்ற ஹேஷ்டேக்குடன் இந்த பிரசாரம் நடைபெறுகிறது. ரோடு ஷோ நடத்துவது, திரையரங்குகளில் விளம்பரம் செய்வது என தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர் ஆஸ்திரேலியர்கள். கோர்ட்டிலும் அதானி திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

English summary
Thousands of activists will converge on a range of sites around the country on October 7 to send a message to politicians to say No to Adani No to funding Adani from taxpayer’s money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X