For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.நகருக்கு ரங்கநாதன்.. சிகாகோவுக்கு திவான்.. குட்டி இந்தியா.. இது செம க்யூட்யா!

Google Oneindia Tamil News

சிகாகோ: அமெரிக்காவில் கூட நம்ம ஊர் திநகர் ரங்கநாதன் ஸ்ட்ரீட்ல நுழைந்த அனுபவத்தை பெற முடியுமா. முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா.

ஆமாங்க அமெரிக்காவில் சிகாகோ நகரின் முக்கியமான ஒரு இடத்தை குட்டி இந்தியா என்று தான் சொல்லுகிறார்கள். அந்த இடம் எப்படி அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று தான் இந்த பதிவு.

ரொம்ப பிரபலமான சிகாகோ நகரின் சாலைகளில் பெரிய பெரிய கட்டங்களை சுற்றி பார்த்து வியந்து முடிந்து விட்ட மக்களுக்கு சுற்றுலா அதோடு முடிந்து விடுவதாயில்லை. சிகாகோ வரும் எல்லோரும் இந்த குட்டி இந்தியாவை விசிட் செய்து விட்டு தான் போகிறார்கள்.

 இது நம்ம ஊரு

இது நம்ம ஊரு

காரில் வரும்போதே இந்த பகுதியை நெருங்கினாலே மனசுக்குள் ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக்கொள்ளும் . காரணம் என்னவென்றால் இந்த சாலையின் இருபுறங்களில் இருக்கும் அத்தனை கடைகளும் நம்ம ஊரு கடைகள் தான். அமெரிக்காவின் மக்கள் தொகை அதிகமுள்ளள நகரங்களில் ஒன்றான சிகாகோ நகரில் அமைந்திருக்கும் இடம் தான் திவான் அவென்யு . அந்த இடம் முன்பு சர்ச் ஸ்ட்ரீட் என்று தான் அழைக்கப்பட்டிருக்கிறது. 1880 களுக்கு பிறகு திவான் ஸ்டேஷன் இருப்பதால் இந்த இடம் திவான் ஸ்ட்ரீட் என்று ஆகி இருக்கிறது.

 இது எங்க ஏரியா

இது எங்க ஏரியா

இங்கு இந்தியர்களும் நம்ம பக்கத்துக்கு நாடான பாகிஸ்தான் மக்களும் அதிகம் இருக்கிறார்கள். சகோதர்கள் போல ஜோரா ஒற்றுமையா இருக்கிறாங்க. இந்த இடத்தில் அதிகம் இருப்பது இந்தியர்கள் , பாக்கிஸ்தான் மட்டுமல்லாமல், அப்புறம் பங்களாதேஷ் மக்களும் உள்ளனர். கொஞ்சமா அமெரிக்கர்கள் என்று பெரும்பாலும் ஆசிய மக்கள் தான் அங்கு சூழ்ந்து இருக்கிறார்கள்.

 நம்ம ஊரு ஜிமிக்கி கம்மல்

நம்ம ஊரு ஜிமிக்கி கம்மல்

நம்ம ஊரு நகைக்கடைகள் எல்லாம் இங்கு பார்க்க முடியும். ஜோஸ் ஆலுக்காஸ் , மலபார் கோல்ட் , காய் ஜவெல்லர்ஸ் என்று நீண்டு கொண்டு போகிறது நகைக்கடை லிஸ்ட். நம்ம ஊரு ஜிமிக்கி கம்மல் முதல் நம்ம ஊரு அட்டிகை வரை எல்லாம் சூப்பரா பார்த்து வாங்கலாம்.

 நம்ம ஊரு புடவை

நம்ம ஊரு புடவை

அப்புறம் நம்ம ஊரு புடவை வாங்கணும் என்றால் திவான் ஸ்ட்ரீட் போங்க என்று சொல்லுமளவுக்கு இங்கு நம்ம ஊரு துணிமணிகள் எல்லாம் இருக்கு. குட்டிஸ் பட்டுப்பாவாடை, லேடீஸ் சுடிதார், குட்டிஸ் வேட்டி , ஆண்கள் வேட்டி சட்டை, குர்தா என்று நம்ம ஊரு பாரம்பரிய உடைகள் ஓன்று விடாமல் இங்கு உள்ள துணிக்கடையில் வரிசையா அடுக்கி வச்சிருக்காங்க . நம்ம ஊர் ஸ்டைல் பர்ஸ் முதல் வளையல்கள் என்று எல்லா குட்டி குட்டி பொருட்களும் அங்கே பார்க்கும்போது மனசுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி.

 நம்ம ஊரு மளிகை சாமான்

நம்ம ஊரு மளிகை சாமான்

அப்புறம் இந்திய மக்களுக்கு தேவையான நம்ம ஊரு மளிகை சாமான் கடைகள் இருக்கும். அப்புறம் சிக்கன் மட்டன் என்று எல்லா வகையான இறைச்சி வகைகளும் எல்லாம் இங்கே அதிகம் காண முடியும். அது மட்டுமா இப்படி அப்படி ஷாப்பிங் முடிச்சு வரும்போது வயிறு குர் னு ஒரு சத்தம் போடும் . பசிக்கு இங்கு வேறு வலி இல்லாம பிஸ்சா சாப்பிட வேண்டியதில்லை. ஆமாங்க அந்த ஸ்ட்ரீட் முழுவதும் இந்தியன் ரெஸ்டராண்ட்ஸ் எல்லாமே இருக்கு.

உடுப்பி டூ தாபா வரை


கர்நாடக ஸ்பெஷல் உடுப்பி ஹோட்டல், அன்னபூராணா, ஆந்திரா ஸ்பெஷல் ஹைதெராபாத் பிரியாணி, நம்ம ஊரு ஆரிய பவன், அப்புறம் மைஸூர் வூட்லண்ட்ஸ், பஞ்சாபி தாபா என்று எல்லாரும் பிடித்த எல்லா வகையான சாப்பாட்டயும் ஒரு கட்டு கட்டி விட்டு ஜாலியா வீடு திரும்பலாம்.நம்ம சுதந்திர தினத்திலே இங்கு சிறப்பு அணிவகுப்பு கூட உண்டு.

அதுசரி சிகாகோவில் குட்டி இந்தியா எப்படி இருக்கிறது? நம்ம இந்தியர்கள் அமெரிக்காவிலே எப்படி ரங்கநாதன் ஸ்ட்ரீட் மாதிரி ஒரு ஸ்ட்ரீட் முழுவதும் நம்ம ஊரு கடையா அடுக்கி வச்சிருக்காங்க என்று நீங்களே இந்த விடீயோவில பாருங்க அசந்து போவீங்க.

- Inkpena சஹாயா

English summary
Here is an article on one of the iconic places called Little India in Chicago city that is the Devon avenue with the walking tour video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X