For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானில் வட்டமிட்ட வெளிச்சம்.. விசித்திர ஒளி.. அமெரிக்காவில் மக்களை குழப்பிய ஆகாயம்.. திக் வீடியோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    வானில் வட்டமிட்ட வெளிச்சம், அமெரிக்காவில் மக்களை குழப்பிய ஆகாயம்.

    சான் பிரான்சஸ்கோ: அமெரிக்க வான்வெளியில் வெளிச்சத்துடன்கூடிய வித்தியாசமான கோலத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    சூரியன் மறையும் மாலைபொழுதில் வண்ணங்கள் நிறைந்த வானில், மின்னல் தாக்கியது போல் வெளிச்சம் ஏற்பட்டது. அதனை கண்ட மக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ட்வீட்டரில் ஷேர் செய்தனர்.

    அதில், என்ன இது புதிய கோலம் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இன்னும் பலர் தங்களுடைய கற்பனையில் சில பதிவுகளை புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தனர்.

    ராக்கெட் வெளிச்சம்?

    வானில் வெளிச்சம் தோன்றிய நேரத்தில் தான் கலிபோர்னியாவில் இருந்து டெல்டா IV என்ற கனரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு வேலை ராக்கெட் கீழே விழுந்து இருக்கலாம் என்றும் ராக்கெட்டினால் புகை ஏற்பட்டு இருப்பதாகவும் சிலர் பதிவிட்டனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறால் ராக்கெட் விண்ணில் ஏவப்படவில்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டது.

    விண்கல் விழுந்ததா?

    இந்தநிலையில் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் விண்கல் விழுந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் 100 சதவீதம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானில் தெரிந்த வடிவம் டெக்சாஸ் மாகாணம் வரையில் தெரிந்ததாக கூறப்படுகிறது.

    நாசா விளக்கம்

    மேலும், விமானம் கீழே விழுகிறதா என்ன ? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் விதமாக வானில் நாசாவின் இணையதளத்தில் தகவல் ஒன்று வெளியானது. அதில், வானில் உருவான மேககூட்டங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அறிவியல் மையம் தகவல்

    சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சிறிது நேரத்தில் வளிமண்டலத்தில் விழுந்த மிக பிரகாசமான விண்கலம் என்று கலிபோர்னியா அகாடமி ஆஃப் மோரிசன் பிளானட்டேரியின் உதவி இயக்குனரான பிங் காக் தெரிவித்துள்ளார். அநேநேரம் அங்குள்ள செய்தி சேனல் நிறுவனங்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளனர். மக்களை குழப்பதில் ஆழ்த்திய அந்த வெளிச்ச வட்டம் என்ன தான் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

    English summary
    A meteor can create a very high level cloud called a noctilucent cloud. NASA has a great webpage explaining the cloud formation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X