For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை 5.13 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அதிகாலையில் கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் எழுந்த மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை

Strong earthquake hits off Philippines no major impact seen

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு என அழைக்கப்படும் பசிபிக் ரிங் ஆஃப் ஃபயரின் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் எற்படவில்லை. பிலிப்பைன்சில் கடந்த 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று நடைபெற்ற பயங்கர நிலநடுக்கத்தில் 270 பேர் பலியானார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

மணிலாவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

English summary
A strong earthquake hits in Philippines capital Manila this morning. An earthquake measuring 6.4 struck in the Philippines on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X