For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்..உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் பதற்றம்

Google Oneindia Tamil News

கராகஸ்: வெனிசுலா நாட்டில் தன்னை தானே சுயமாக அதிபர் என அறிவித்து கொண்டுள்ள ஜுவான் கெய்டோ, ராணுவ படைகளில் பெரும்பாலானோர் நிகோலஸ் மதுரோவை அதிபர் பதிவியிலிருந்து தூக்கி எறிய தம்முடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளார்.

வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிரான போராட்டத்தின் போது மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றார். இதனை ஏற்க மறுத்துவிட்ட எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலகக் கோரி தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

struggle against the president in Venezuela is intense ... tension because of the internal confusion

கடும் உள்நாட்டு குழப்பங்களுக்கு இடையே ராணுவத்தில் ஒரு பிரிவினர் மதுரோவுக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

கராகஸ் இராணுவ தளத்திற்கு அருகே கூடிய ஆயிரக்கணக்கானோர் கையில் வெனிசுலா நாட்டு கொடியை ஏந்தி அதிபருக்கு எதிராக முழக்கமிட்டனர். காரகாஸில் நடந்த போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

மதுரோவுக்கு ஆதரவாக ஒரு பிரிவு ராணுவத்தினரும், எதிராக மற்றொரு பிரிவு ராணுவத்தினரும் தங்களுக்குள் மாறி மாறி துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஸ்டாலின், உங்க மேல மக்களுக்கே நம்பிக்கையில்லை.. சட்டைக் கிழிப்பு.. போட்டி சட்டசபை.. தமிழிசை நக்கல்! ஸ்டாலின், உங்க மேல மக்களுக்கே நம்பிக்கையில்லை.. சட்டைக் கிழிப்பு.. போட்டி சட்டசபை.. தமிழிசை நக்கல்!

போராட்டத்திற்கு தலைமையேற்ற ஜுவான் கெய்டோ மதுரோவின் ஆட்சியை தூக்கி எறிவதற்கதான துவக்க புள்ளி தான் இது மக்களும் ராணுவத்தினரும் என்னோடு இன்னும் சில நாட்களுக்கு இணைந்து முழுமூச்சாக போராடினால் மதுரோவால் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது என்றார்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெனிசுலா அரசு, துரோகம் புரிய முடிவு செய்த ஒரு சிறிய குழு ராணுவ வீர்களால் தற்போது குழப்பம் நிலவுகிறது. விரைவில் இந்த சதி வெற்றிகரமாக முறியடிக்கப்படும் என கூறியுள்ளது.

English summary
Juan Gaido, who has himself declared himself a self-serving president in Venezuela, has declared that most of the armed forces have collaborated with Nicholas Maduro to step down from the president post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X