For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவை தடுக்காத திராணி இல்லை- நேபாள அரசுக்கு எதிராக கிளர்ச்சி- மாணவர்களும் களத்தில் குதித்தனர்

Google Oneindia Tamil News

காத்மாண்டு: கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க தவறியதால் நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. தற்போது ஒலி அரசுக்கு எதிராக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நேபாளத்தில் கொரோனா வைரஸ் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலையில் 6,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Students protest against Nepals Oli government on Coronavirus issue

ஆனால் கொரோனாவை தடுப்பதில் பிரதமர் ஒலி தலைமையிலான அரசு கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டியது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. இதனால் ஒலி அரசுக்கு எதிராக சனிக்கிழமை முதல் தலைநகர் காத்மாண்டுவில் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டதாக 7 வெளிநாட்டினரையும் நேபாள அரசு கைது செய்தது. இதற்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில் நேபாளத்தில் பிரதமர் ஒலி தலைமையிலான அரசு பதவி விலக கோரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் குலைநடுங்க வைக்கும் கொரோனா- ஒரே நாளில் 2,786 பேருக்கு பாதிப்பு- 178 பேர் பலிமகாராஷ்டிராவில் குலைநடுங்க வைக்கும் கொரோனா- ஒரே நாளில் 2,786 பேருக்கு பாதிப்பு- 178 பேர் பலி

காத்மாண்டுவில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒலி அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் நேபாளத்தில் ஆளும் ஒலி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

English summary
Protests were held in Kathmandu on Monday against Oli government with students demanding an end to corruption and slamming the government over its inefficiency in handling Coronavirus situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X