For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவர்.. கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை

சூடானில் வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை-வீடியோ

    ஓம்துர்மன்: சூடானில் வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான நிலையில் நவுராவுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    ஆனால் நவுராவுக்கோ திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. படித்து ஆசிரியையாக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது.

    நைசாக பேசி அழைத்து..

    நைசாக பேசி அழைத்து..

    இதனால் கணவருடன் வாழ மறுத்த அவர் தனது அத்தை வீட்டில் மூன்று ஆண்டுகளை கழித்தார். பின்னர் அவரிடம் நைசாக பேசி அழைத்து சென்ற குடும்பத்தினர் நவுராவை அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

    அனுமதியின்றி உறவு

    அனுமதியின்றி உறவு

    ஒப்படைக்கப்பட்ட சில நாட்களிலேயே குடும்பத்தினர் உதவியுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்தார் அவரது கணவர். மறுநாளும் தனது மனைவியை அவரின் அனுமதியின்றி பலாத்காரம் செய்ய முயன்றார் கணவர்.

    கணவரை கொன்ற மனைவி

    கணவரை கொன்ற மனைவி

    இதனால் ஆத்திரமடைந்த நவுரா கணவர் என்றும் பாராமல் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். பின்னர் கணவரை கொலை செய்ததை கூறி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

    இழப்பீடு கேட்டால்

    இழப்பீடு கேட்டால்

    இதுதொடர்பாக நவுரா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இஸ்லாமிய சட்டதிட்டப்படி, கொலையாளியிடம் இருந்து, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற சம்மதித்தால் கொலையாளிக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்கும்.

    மரண தண்டனைக்கு வலியுறுத்தல்

    மரண தண்டனைக்கு வலியுறுத்தல்

    ஒருவேளை இழப்பீட்டை அவர்கள் ஏற்காவிட்டால், கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் நவுரா வழக்கில் கணவரின் குடும்பத்தினர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    மனைவிக்கு மரண தண்டனை

    மனைவிக்கு மரண தண்டனை

    ஒருவேளை இழப்பீட்டை அவர்கள் ஏற்காவிட்டால், கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் நவுரா வழக்கில் கணவரின் குடும்பத்தினர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    English summary
    Wife kills husband for raping her without consent. Sudan court sentence death to wife.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X