For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு.. சுந்தர் பிச்சை, மார்க் ஜுகர்பெர்க் எதிர்ப்பு!

பிரான்ஸ் பாரீஸ் நகரத்தில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க வெளியேறுவதற்கு சுந்தர் பிச்சை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு 2015ம் ஆண்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் போடப்பட்ட உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா அதிபர் வெளியேறுவதாக அறிவித்துள்ளதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர் டிரம்ப், பாரீஸ் உடன்படிக்கையை முற்றிலுமாக மாற்றி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவோம் என்றும் கூறியிருந்தார்.

Sundar Pitchai opposes Trump’s decision

இதற்கு கடுமையான எதிர்ப்பு உலக அளவில் எழுந்துள்ளது. குறிப்பாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் பேஸ்புக் சிஇஓ மார்க் ஜுகர்பெர்க் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்ந்து கூகுள் பாடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று பேஸ்புக் சிஇஓ மார்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிரம்பின் அறிவிப்பு சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகியவற்றை கெடுப்பதாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Google CEO Sundar Pitchai opposed Trump’s decision of Paris climate agreement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X