For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்தமனம் தொடங்கிவிட்டது.. சீனாவை சீண்டியதால் பொங்கி எழுந்த கிம் ஜோங்.. அமெரிக்காவிற்கு வார்னிங்!

சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Google Oneindia Tamil News

பியாங்யாங்: சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவுடன் வடகொரியா அணு ஆயுத ஒப்பந்தம் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி வடகொரியா பேசி இருப்பது அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்கா சீனா சண்டை காரணமாக உலக அரசியலில் மிகவும் கொதிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அமெரிக்காவை ஆதரிக்க பெரிய அளவில் உலக நாடுகள் கூட தொடங்கி இருக்கிறது. நேட்டோ படையில் இருக்கும் நாடுகள், ஜி7 நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கிறது.

சீனாவிற்கு எதிரான சண்டையில் அமெரிக்காவிற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் சீனா உலக அளவில் தனித்து விடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல் ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல்

வடகொரியா

வடகொரியா

இந்த நிலையில் தற்போது சீனாவிற்கு வடகொரியா நேரடியாக ஆதரவு அழைக்க தொடங்கி உள்ளது. சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக வடகொரியா வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில் சீனா தொடர்ந்து அமெரிக்கா நெருக்கி வருவதை ஏற்க முடியாது. அமெரிக்கா வேண்டும் என்று சீனாவை அச்சுறுத்தி வருகிறது.

கடும் அச்சம்

கடும் அச்சம்

அமெரிக்கா தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறது. அமெரிக்கா தோல்வியை நோக்கி சரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் முன்னேற்றத்தில் இருக்கும், வெற்றி பாதையை நோக்கி செல்லும் சீனாவை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது. மற்ற நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்து வந்தது. மற்ற நாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா உளவு பணிகளை செய்து வந்தது.

ஆனால் இப்போது

ஆனால் இப்போது

ஆனால் இப்போது அமெரிக்காவால் அப்படி செய்ய முடியவில்லை. அமெரிக்காவிற்கு தற்போது உலக அரசியலில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அதற்கு சூரியன் எங்கே உதிக்கிறது, மறைகிறது என்று கூட தெரியவில்லை. அமெரிக்காவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது. சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் ஏற்படும் கிரகணம் போல அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும் என்று வடகொரியா கடுமையாக குறிப்பிட்டு இருக்கிறது.

ஒப்பந்த நீக்கம்

ஒப்பந்த நீக்கம்

நாங்கள் இன்னும் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தந்தை முழுமையாக செய்யவில்லை. தென் கொரியா எங்களுக்கு எதிராக செயல்படுவதை இனியும் பொறுக்க முடியாது. எங்கள் நாட்டில் அமெரிக்காவின் உதவியுடன் தென் கொரியா உளவு வேலைகளை செய்கிறது. தென் கொரியாவுடன் நாங்கள் செய்து இருக்கும் ஒப்பந்தங்களை இதனால் நீக்க வேண்டி வரும் என்று வடகொரியா கூறியுள்ளது.

Recommended Video

    லடாக் முழுவதும் இந்திய விமானப்படை தீவிர ரோந்து
    வேறு கிண்டல்

    வேறு கிண்டல்

    அதே சமயம் இன்னொரு பக்கம் ஜார்ஜ் பிளாய்டு மரணம் குறித்தும் வடகொரியா கிண்டல் செய்து இருக்கிறது. அதில் அமைதியாக போராடி வரும் மக்கள் மீது அமெரிக்கா அடக்குமுறையை கடைபிடிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதான் அமெரிக்காவின் தற்போதைய நிலை. அங்கு மக்கள் சுதந்திரமாக இல்லை. அங்கு மக்கள் நிம்மதியாக இல்லை, என்று வடகொரியா குறிப்பிட்டுள்ளது.

    English summary
    Sunset during the eclipse of the US starts says North Korea supporting China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X