துபாயில் சூப்பர் ஸ்டார்ஸ் டி20 இரண்டாவது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்
துபாய்: துபாயில் சூப்பர் ஸ்டார்ஸ் டி20 இரண்டாவது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை(18ம் தேதி) முதல் மே மாதம் 17ம் தேதி வரை துபாய் ஆண்கள் கல்லூரியில் அமைந்துள்ள ஃபேர்கிரவுண்ட் ஓவல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 65 ஆயிரம் திர்ஹமும் ஒரு காரும் பரிசாக அளிக்கப்படும். போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
துபாய் கிரிக்கெட் கவுன்சில் துணைத் தலைவர் முஹம்மது ரேதா அப்பாஸ், செயலாளர் அமீன் ஃபாரூக், பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு தூதர் ஜாவேத் மாலிக், இலங்கை கன்சல் ஜெனரல் அப்துல் ரஹீம், இந்திய கன்சல் - கல்வி கஜாரி பிஸ்வாஸ், இந்திய வர்த்தகப் பிரமுகர் பரத்பாய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அணி விபரம், அணிக்கான சீருடை, கோப்பை உள்ளிட்டவை குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

அலுபான்ட் ஹைதராபாத் நவாப், புரூக்ஸ் கொலும்பு லயன்ஸ், டானுமே மும்பை வாரியர்ஸ், குளோப்லிங்க் வெஸ்ட்ஸ்டார் கொச்சி ஐலேண்டர்ஸ், இன்டர்ஃபேஸ் டெல்லி முகல்ஸ், மல்டிபிளக்ஸ் துபாய் ராயல்ஸ், செவன் சீஸ் ராஜஸ்தான் ராயல்ஸ், விங்ஸ் அகமதாபாத் ஆசஸ், யாஸ் ஸ்போர்ட் ராவல்பிண்டி ராயல்ஸ் உள்ளிட்ட 16 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.
போட்டிகள் துபாய் கிரிக்கெட் கவுன்சில் ஆதரவுடன் வெப் சேனல், ஜூஹி யாஸ்மின் கான் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications