For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போஸ்னியாவில் அதிரடி.. லட்சுமி மிட்டல் தம்பி பிரமோத் மிட்டல் மோசடி புகாரில் கைது!

Google Oneindia Tamil News

சரஜேவோ: மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல், போஸ்னியா நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் லட்சுமி மிட்டல். இவரது சகோதரர் பிரமோத் மிட்டல். இவர் போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றில், கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து பங்குதாரராக உள்ளார். இந்த தொழிற்சாலையில், சுமார் ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

Suspected Fraud, Industrialist Pramod Mittal arrested in Bosnia

இந்நிலையில், மோசடி நடந்துள்ளது என்ற சந்தேகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார குற்றம், போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அரசு வழக்கறிஞர் அறிவுறுத்தலின் பேரில், பிரமோத் மிட்டல், அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Zurnal.info வலைத்தளத்தின் தகவல் அடிப்படையில், சந்தேக மோடியில் கைது செய்யப்பட்டுள்ள பிரமோத் மிட்டல், குறைந்தது ஐந்து மில்லியன் (2.5 மில்லியன் யூரோ, $2.8 மில்லியன்) மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Industrialist Pramod Mittal Arrested In Bosnia For Suspected Fraud ( At least five million (2.5 2.5 million, $ 2.8 million)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X