For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடூரம்.. இப்படி எல்லாம் நடக்குமா?.. தேனீ கடித்து பலியான 63 பென்குயின்கள்.. அழிவின் விளிம்பு!

Google Oneindia Tamil News

கேப்டவுன்: தேனீக்கள் கடித்து பென்குயின்கள் பலியான சம்பவம் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலநிலை மாறுபாடால் பல்வேறு உயிரினங்கள் பலியாகி வரும் நிலையில் பென்குயின்கள் மரணம் இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    அரிதான காரணம்! South Africa-வில் ஒரே நாளில் பலியான 63 Endangered Penguins | Oneindia Tamil

    உலகம் முழுக்க வானிலை மாறுபாடு காரணமாக பல்வேறு உயிரினங்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. திடீர் வெள்ளம், காட்டுத்தீ காரணமாக பறவைகள், பல்வேறு விலங்கு இனங்கள், ஊர்வன வகை விலங்குகள் அழிந்து போகும் கொடூரம் ஏற்பட்டுள்ளது.

     நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க முடிவு நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க முடிவு

    முக்கியமாக பனிப்பிரதேசங்களில் வாழும் விலங்குகள் மரணிக்க தொடங்கி உள்ளன. பனிப்பிரதேச கரடிகள், பனிப்பிரதேசங்களில் மட்டுமே வாழும் பிரத்யேக விலங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கி உள்ளன. வெப்பநிலை மாறுபட்டால் ஆர்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருக தொடங்கி உள்ளது. இதனால் அங்கு வாழம் கரடிகள், பென்குயின்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. காலநிலை மாற்றத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக பல விலங்குகள் தங்கள் உடல் அமைப்பையும் மாற்றி வருகின்றன.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்த நிலையில்தான் தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் அருகே இருக்கும் சைமோன்ஸ்டவுன் பகுதியில் உள்ள கடல் பகுதியில் வாழ்ந்து வந்த 63 பென்குயின்கள் பலியாகி இருக்கின்றன. ஒரே நாளில் மர்மமான முறையில் பென்குயின்கள் பலியாகி கடற்கரை அருகில் கிடந்தன. இந்த பென்குயின்கள் முதலில் சாப்பிட்ட உணவு காரணமாக பலியாகி இருக்கலாம் அல்லது வேறு காரணம் இருக்கலாம் என்று கருதப்பட்டது.

    சோதனை

    சோதனை

    இதையடுத்து அந்த பகுதிக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விலங்குகள் நல மருத்துவர்கள் ஆகியோர் உடனடியாக வந்து குவிந்தனர். அந்த பென்குயின்களை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சோதனை செய்தனர். மரணத்திற்கு காரணம் என்ன என்று சோதனை செய்தனர். பென்குயின்களின் உடல்களில் விஷம் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    காரணம்

    காரணம்

    பின்னர் உடலில் தடிப்புகளும், தேனீக்கள் கடித்த தடமும் இருந்தது. முழு சோதனையின் முடிவில் கொடூரமான தேனீ வகை ஒன்று கடித்ததில் இந்த பென்குயின்கள் பலியானது கண்டுபிடிக்கப்பட்டது. பென்குயின்களின் கண்களை சுற்றி இப்படி தேனீக்கள் கடித்த காரணத்தால் இந்த மரணம் நிகழ்ந்து உள்ளதாக உடற்கூறு சோதனையில் முடிவு தெரிய வந்துள்ளது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இது தொடர்பாக பென்குயின்களை சோதனை செய்த தென் ஆப்ரிக்க விலங்குகள் மற்றும் பறவைகள் தொண்டு அமைப்பை சேர்ந்தவர்கள், இது யோசித்து பார்க்க முடியாத மிகவும் அரிதான நிகழ்வு. இப்படி நடக்கும் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை. எங்களுக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தேனீக்கள் சில பென்குயின்களை கடித்துவிட்டு அதே பகுதியில் பலியாகிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மோசமான நிலை

    மோசமான நிலை

    இந்த பென்குயின்கள் ஏற்கனவே அழியும் நிலையில் இருந்தது. இதை பாதுகாத்து வளர்ந்து வந்தோம். ஆனால் இப்போது தேனீக்கள் கடித்து பலியாகி உள்ளது. இதனால் அந்த குறிப்பிட்ட வகை பென்குயின்கள் அழிவின் விளிம்பு நிலைக்கு சென்று இருக்கிறது. பல இடங்களில் தேனீக்கள் கடித்து மிக மோசமாக பாதிக்கப்பட்டு இந்த பென்குயின்கள் பலியாகி உள்ளன. இது மிக மோசமான நாள் எங்களுக்கு. இந்த பகுதியில் எப்படி இது நடந்தது என்று சோதனை செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    English summary
    In rare occurrence, Swarm of bees killed 63 endangered Penguins in South Africa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X