For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடக் கருமமே.. ஒரு ஜென்டில்மேன் செய்யும் வேலையா இது...??

Google Oneindia Tamil News

லாஹோம், ஸ்வீடன்: ஸ்வீடனில் ஒரு கூத்து நடந்துள்ளது. தான் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்ததும் கோபத்தில் தன் வீட்டுக்குள் "கேஸ்" விட்டு தனது மன அமைதியைக் கெடுத்து விட்டதாக ஒரு நபர் மீது பெண் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் "கேஸ்" விட்டதில் வீடே நாறிப் போய் விட்டதாகவும் அவர் தனது புகாரில் விவரித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அந்தப் பெண் கேட்டுள்ளார்.

Sweden woman complains of

ஸ்வீடனின் ஹாலன் நகரில் உள்ள லாஹோம் என்ற இடத்தில் வசித்து வருகிறார் அந்தப் பெண். அவரும் ஒரு ஆணும் ஒரு இடத்தில் சந்தித்து அறிமுகமாகியுள்ளனர். இருவரும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். சந்தித்த இடத்தில் வைத்து சற்றே சிந்தித்துள்ளனர்.. இறுதியில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு அந்த நேரத்திற்கு வீட்டுக்கு வருமாறு அந்தப் பெண் கூறி விட்டுப் போய் விட்டார். அந்த நபரும் அதீத உற்சாகத்துடன், குஜாலாக கிளம்பி வீட்டுக்கு வந்துள்ளார். அப்பெண்ணும் அவரை வரவேற்று வீட்டுக்குள் அமர வைத்தார். ஆனால் இப்போது எனக்கு "மூடு" இல்லை. இப்போது வேண்டாம். இன்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியாகி விட்டார் அந்த ஆண். கோபம் கொண்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டார். இதுகுறித்து அப்பெண் போலீஸில் அளித்துள்ள புகாரில், நான் செக்ஸ் வேண்டாம் என்று கூறியதும் அவர் கோபமடைந்தார். உடனே வேகமாக எழுந்த அவர் பலமாக "கேஸ்" விட்டு விட்டு கிளம்பிப் போய் விட்டார்.

அது மிக மோசமான நாற்றமாக இருந்தது. எனது வீடே நாறிப் போய் விட்டது. எனது மன அமைதியும் குலைந்து போய் விட்டது என்று கூறியிருந்தார் அப்பெண்.

இந்தப் புகாரைப் பெற்ற போலீஸார் அதை பதிவு மட்டும் செய்து கொண்டனராம். "மேல் விசாரணை"யை கை விட்டு விட்டனராம்.

நல்ல வேளையாப் போச்சு போங்க.. !

English summary
A Swedish woman has given a complaint against a man of "revenge fart" after she refused his advances to have physical relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X